wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (படிவம் 4)

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஆகுபெயர் என்றால் என்ன?

a)

ஓரிடத்தின் பெயர் அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்குப் பெயராகி வருவது ஆகுபெயராகும்.

b)

ஒரு பொருளின் பெயர் அதனைக் குறிக்காமல், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகிவருவது ஆகுபெயர் ஆகும்.

c)

ஒரு முழுப்பொருளின் பெயர் அதற்கே உரிய பொருளைக் குறிக்காது, அதன் சினையைக் மட்டும் குறித்து வருவது ஆகுபெயர் ஆகும்.

d)

ஒரு காலத்தின் பெயர், அக்காலத்தில் செய்யப்படுகின்ற செயல் அல்லது தன்மையைக் குறிப்பது ஆகுப்பெயராகும்.

2.

சரியான காலவாகு பெயர் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

கார் அறுத்தான்.

b)

தலைக்குப் பத்தி வெள்ளி கொடு.

c)

இனிப்பு உண்டான்.

d)

தாமரை மலர்ந்தது.

3.

ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலிமிகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

பேசாப் பையன்

b)

மலைத்தோள்

c)

யானைத் தந்தம்

d)

ஓடாக் குதிரை

4.

சரியான பண்புத்தொகை கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.

a)

அண்ணனும் தம்பியும்

b)

மலைத்தோள்

c)

முத்துப்பல்

d)

செந்தாமரை

5.

எவ்வ துறைவது உலகம் உலக்த்தோடு

அவ்வ துறைவது அறிவு (426)

கொடுக்கப்பட்டுள்ள குறளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

b)

படிக்கப் படிக்க ஒரு நயமான நூலின் சிறப்பு அதிகரிப்பதுபோல, நல்ல குணமுடையவர்களின் நட்பு பழகப் பழக இன்பத்தை அதிகரிக்கும்.

c)

உலகப்போக்கு எப்படி இருக்கின்றதோ, அந்த உலகத்தோடு பொருந்திய வகையில் நாமும் அதைக் கடைப்பிடித்து அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

6.

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான தனிக்காத்தான் - மாதர்

----------------------------------------------------------

----------------------------------------------------------

சரியான அடுத்து இரண்டு அடியைத் தெர்வு செய்க.

a)

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

b)

கற்புத் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்!

c)

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

7.

சரியான இணைமொழியையும் அதன் பொருளையும் தெரிவு செய்க.

a)

கால நேரம் - பொய்யான காரணம்

b)

இன்பம் துன்பம் - தக்க சமயம்

c)

அரிய பெரிய - சுக துக்கம்

d)

அக்கம் பக்கம் - அருகருகே / குறிப்பிட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதி

8.

சரியான உவமைத்தொடரையும் அதன் பொருளையும் தெரிவு செய்க.

a)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - துன்பத்துக்குமேல் துன்பம்

b)

இருதலைக் கொள்ளி எறும்பு போல - ஒரு பொருளின் சேதமடைவதைத் தடுக்க முடியாமை / பாதிப்பு ஏற்படுவது உறுதி

c)

நீர்மேல் எழுத்துப் போல - நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்

9.

படிக்கப் படிக்க ஒரு நயமான நூலின் சிறப்பு அதிகரிப்பதுபோல, நல்ல குணமுடையவர்களின் நட்பு பழகப் பழக இன்பத்தை அதிகரிக்கும்.

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் பொருளுக்கேற்ப சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

b)

உலக்ப்போக்கு எப்படி இருக்கின்றதோ, அந்த உலகத்தோடு பொருந்திய வகையில் நாமும் அதைக் கடைப்பிடித்து அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

c)

படிக்கப் படிக்கப் ஒரு நயமான நூலின் சிறப்பு அதிகரிப்பதுபோல, நல்ல குணமுடையவரிகளின் நட்பு பழகப் பழக இன்பத்தை அதிகரிக்கும்.

10.

சரியான சினையாகு பெயர் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

மலேசியா வென்றது

b)

இனிப்பு உண்டான்

c)

தலைக்குப் பத்தி வெள்ளி கொடு

d)

நீலம் சூடினாள்