NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
தொழில்பெயர் தொடர்பான தவறான விதியினைத் தெரிவு செய்க.
தல் விகுதியை ஏற்று வரும்
வாக்கியத்தின் வினைச்சொல்லாக வரும்
ஒரு தொழிலைக் குறிப்பதாகும்
ஒரு செயலின் தன்மையைக் குறிக்கும்
கீழ்க்காணும் புணரியலுக்கு ஏற்ற விதியைக் கொண்ட வேறொரு சொல்லைத் தெரிவு செய்க.
கிழக்கு + நாடு
எவ்வெட்டு
தென்மேற்கு
பதினொன்று
சிற்றூர்
'உடைந்த கண்ணாடி' எனும் சொற்றொடர் எவ்வகையைச் சார்ந்த விதியைக் கொண்டிருக்காது.
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக்கொண்டு முடிதல்
“அ” என்ற விகுதியைக் கொண்டு முடியும்.
3 காலங்களிலும் வரும்.
ஒரு எச்ச வினை வினைச்சொல்லை (வினைமுற்று) கொண்டு முடிதல்.
உயர்திணையைக் குறிக்கும் பால்வகையைத் தெரிவு செய்க.
அவன்,அவள்,அவர்கள்
வசந்தன், வசந்தி, வாளி
மாலினி,மாணவர்கள், மாடு
கலைஞர்கள். ஆடு. ஆடுகள்
ஓர் எழுத்துச் சொல்லுக்கு முன் வரும் வல்லினம் மிகுதலுக்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.
பூ + வாளி
தீ + சட்டி
கை + விரல்
தீ + ஏற்றி
வேற்றுமைப் புணர்ச்சியில் எந்த வேற்றுமை உருபுகளின் முன்னர் வரும் வல்லினம் மிகும்?
ஏழாம் வேற்றுமை உருபாகிய விளித்தல் முன்னர் வரும் வல்லினம் மிகும்.
ஆறாம் வேற்றுமை உருபாகிய அது,உடைய முன்னர் வரும் வல்லினம் மிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ முன்னர் வரும் வல்லினம் மிகாது
நான்காம் வேற்றுமை உருபாகிய கு முன்னர் வரும் வல்லினம் மிகும்.
பகுத்தறிவற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும் விளக்கம் சொல்லியலில் எப்பகுதியைச் சார்ந்தது ?
உயர்திணை
அ ஃறிணை
பால்
எண்
வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல்லைத் தெரிவு செய்க
நாம் நம் நற்குணங்களைப் பிறருக்கும் புகட்ட வேண்டும்,ஏனெனில் , நம்மால் அவர்களும் பயன் அடைய வேண்டும்.
மாலதி பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால்,அனைவரும் அவளைப் புகழ்ந்தனர்.
முகுந்தனின் உறவினர்கள் அவனுடைய பணத்தைச் சுருட்டிக் கொண்டார்கள். அதற்காக , அவனை வீட்டை விட்டு துரத்தினர்.
வாசுகியின் அன்பான வார்த்தைகள் மனத்திற்குத் தெம்பைத் தந்தன. ஏனெனில்,என் கவலையை அவை போக்கின.
'வேதாகமம்'எனும் சொல்லைப் பிரித்து எழுதினால் வரும் விதியைத் தெரிவு செய்க.
நிலைமொழி ஈற்றில்'அ/ஆ' + 'உ/ஊ' = ''ஓ' தோன்றும்
நிலைமொழி ஈற்றில்'அ/ஆ' + 'இ/ஈ' = ''ஏ' தோன்றும்
நிலைமொழி ஈற்றில்'அ/ஆ' + 'அ/ஆ' = 'ஆ'தோன்றும்
நிலைமொழி ஈற்றில்'அ/ஆ' + 'எ/ஏ' = ''ஐ' தோன்றும்
கீழ்க்காணும் கவிதை காட்டும் காலத்தைத் தெரிவு செய்க.
கல்வியின் பெருமை உணர்த்தி பள்ளிக்
கனுப்பி வைத்தீர்
நல்லடதைக் கெட்டதை வள்ளுவன் போல
நாளும் உரைத்தீர்
பள்ளம் மேடு பார்த்து நடக்க
பாதை அமைத்தீர்
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
