wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"அஞ்சா' எனும் சொல் பொருளின் முதல் சொல்லாகக் கொண்டு தொடங்கும் செய்யுளைத் தெரிவு செய்க.

a)

எண்ணுவது உயர்வு

b)

இளைத்தல் இகழ்ச்சி

c)

ஆண்மை தவறேல்

d)

கற்றது ஒழுகு

2.

'ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு' எனும் கொன்றை வேந்தனுக்குப் பொருத்தமான பழ்மொழியைத் தெரிவு செய்க

a)

தனிமரம் தோப்பாகாது

b)

பதறாத காரியம் சிதறாது

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

3.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் எது விடாமுயற்சியைப் பற்றிய மொழியணி அல்ல.

a)

ஊக்கமது கைவிடேல்

b)

பேரும் புகழும்

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

4.

'கலவியின் அவசியத்தை' உணர்த்தும் செய்யுளுக்குப் பொருத்தமான மொழியணியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

c)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

d)

கல்லார்க்கும் கற்றவர்க்கும்

களிப்பருளும் களிப்பே

5.

'ஆனமுதலில் அதிகஞ் செலவானால்' எனும் செய்யுளின் பொருளுடன் தொடர்புடைய இணைமொழியைத் தெரிவு செய்க

a)

நன்மை தீமை

b)

பழக்க வழக்கம்

c)

வரவு செலவு

d)

தான தர்மம்

6.

'நன்றி'என முடிவுறும் திருக்குறளின் பொருளைத் தெரிவு செயக.

i. ஒருவர் தமக்கு ச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல.அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.


ii.நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.


iii.ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங் கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும்.இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது

a)

i, ii

b)

i, iii

c)

i, ii, iii

7.

கீழ்க்காண்பனவற்றுள் வாக்குண்டாம் செய்யுளின் இறுதியடியைத் தெரிவு செய்க.

a)

ஈசன் எந்தை இணையடி நிழலே

b)

நல்லாருக்கும் பொல்லனாம் நாடு

c)

தலையாலே தாந்தருத லால்

d)

கருமமே கண்ணாயி னார்

8.

நிலப்பகுதியின் தோற்றத்தைக் குறிக்கும் இணைமொழிகள் யாவை ?


I கரடு முரடு

II மேடு பள்ளம்

II நன்மை தீமை

IV அன்றும் இன்றும்

a)

I. II

b)

II. III

c)

I. III

d)

II. IV

9.

அம்மாவின் கண்ணாடி வளையல்களை உடைத்துவிட்ட சந்திரமதி பயத்தினால் ____________________ என விழித்ததைக் கண்ட இளவேணி ______________________ என ஓடி அப்பாவிடம் தெரிவித்தாள்.

a)

திருதிரு........................மளமள

b)

திருதிரு........................குடுகுடு

c)

சிடுசிடு........................குடுகுடு

d)

மளமள........................தடதட

10.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளின் முதலடியைத் தெரிவு செய்க.


கராத்தே போட்டி தொடங்குவதற்குமுன் மிகவும் அமைதியாகக் காத்திருந்த மகேந்திரனைக் கண்டு மற்றப் போட்டியாளர்கள், இவனை எளிதில் வென்று விடலாம் எனக் கருதினர், ஆனால், களத்தில் இறங்கிய மகேந்திரன் எதிரிகள் அனைவரையும் வீழ்த்தி முதல் பரிசை வென்றான்.

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

c)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

d)

அடக்க முடையா ரறிவிலரென றெண்ணிக்