wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

a)

வோ, ரீ, வு, ளை

b)

ங், ஞோ, மெள, னா

c)

தோ, றீ, செ, கூ

d)

மூ, பெள, வை, யோ

2.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

3.

கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

4.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

5.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

6.

பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?


நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

a)

மூன்றாம் வேற்றுமை உருவு

b)

ஆறாம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருவு

7.

கீழ்க்காண்பனவற்றுள் எது தோன்றல் விகாரம்?

a)

கரம் + தா = கரந்தா

b)

கல் + சுவர் = கற்சுவர்

c)

கண் + இமை = கண்ணிமை

d)

மலர் + மாலை = மலர்மாலை

8.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

எனவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

9.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
10.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.


ஐயோ.... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.

a)

! !

b)

! ;

c)

: ;

d)

! .

11.

கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி?

a)

ஔவியம் பேசேல்

b)

ஔடதம் குறை

c)

ஐயமிட்டுண்

d)

ஏற்பது இகழ்ச்சி

12.

தனந்தேடி ______________________ புதைக்க வேண்டாம்.

a)

வாசல் வழி

b)

யுறவென்று

c)

யுண்ணாமற்

d)

யொருநாளும்

13.

வண்ணமிட்ட சொல்லின் பொருள் என்ன?


ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

a)

தன்மை

b)

நட்பு

c)

பிளவு

d)

மேன்மை

14.

கீழ்க்காணும் திருக்குறளின் அடுத்த அடியை எழுதுக.


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

_____________________________________________

a)

உயிரினும் ஒம்பப் படும்.

b)

இகழ்வாரை நோவது எவன்.

c)

என்புதோல் போர்த்த உடம்பு

d)

தோன்றலின் தோன்றாமை

15.

கீழ்க்காணும் செய்யுளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.

காணார்க்கும் கண்டவர்க்கும்

கண்ணளிக்கும் கண்ணே

________________________________________________

________________________________________________

a)

மதியார்க்கும் மதிப்பவர்க்கும்

மதிகொடுக்கும் மதியே

b)

வல்லார்க்கும் மாட்டார்க்கும்

வரமளிக்கும் வரமே

c)

நரர்களுக்கும் சுரர்களுக்கும்

நலங்கெடுக்கும் நலமே

d)

நல்லார்க்கும் பொல்லார்க்கும்

நடுநின்ற நடுவே

16.

கோடிட்ட இடத்தில் சரியான இரட்டைக் கிளவியை நிரப்புக.


தன் காலில் அணிந்திருந்த கொலுசுச் சத்தம் கேட்டு குழந்தை _______________வெனச் சிரித்தது.

a)

சல சல

b)

கிலு கிலு

c)

பள பள

d)

கல கல

17.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

இலைமறை காய் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

d)

சிலை மேல் எழுத்து போல

18.

சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

கடுக்காய் கொடுத்தல் - ஏமாற்றுதல்

b)

மனக்கோட்டை - உறுதியாக

c)

முயல் கொம்பு - கருணை

d)

கை கழுவுதல் - உறவைத் துண்டித்தல்

19.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


திரு.கர்ணன் தம் பெயருக்கேற்ப துன்பம் என்று யார் கேட்டாலும் கருணையுடன் உடனே உதவி செய்து விடுவார்.

a)

ஈடு கட்டுதல்

b)

கை கூடுதல்

c)

ஈவிரக்கம்

d)

செவி சாய்த்தல்

20.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


அந்த மனிதர் ஒரே சமயத்தில் உணவுக் கடையையும் மளிகை கடையையும் திறந்தார். ஆனால்,அவரால் இரண்டிலுமே கவனம் செலுத்த முடியாமல் நஷ்டப்பட்டார்.

a)

பதறாத காரியம் சிதறாது

b)

வருந்தினால் வாராதது இல்லை

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

d)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

21.

வினா எழுத்துகள் எத்தனை ?

a)

3

b)

5

c)

7

d)

4

22.

கொடுக்கப்பட்ட படத்தைப் பற்றிய மிகச் சரியான விடை எது?

a)

உயர்திணை , ஒன்றன்பால்

b)

அஃறிணை , பலர்பால்

c)

அஃறிணை , பலவின்பால்

d)

அஃறிணை , ஒன்றன்பால்

23.

வண்ணமிடப்பட்ட சொல் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபு எது?


வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை ஆசிரியர் கண்டித்தார்.

a)

இரண்டாம்

b)

மூன்றாம்

c)

நான்காம்

d)

ஆறாம்

24.

வேகமாக ஓடிவந்த தம்பி வாசலில் போட்டிருந்த அழகான கோலத்தை மிதித்து விட்டான்.

a)

வினைச்சொல் - பெயர்ச்சொல்

b)

பெயரடை - வினையடை

c)

வினையடை - பெயரடை

d)

வினையெச்சம் - பெயரெச்சம்

25.

கீழ்காண்பனவற்றுள் எது தவறாக வலிமிகுந்துள்ளது?

a)

எந்த + குழந்தை = எந்தக் குழந்தை

b)

அவை + பந்துகள் = அவைப் பந்துகள்

c)

சென்று + பார்த்தார் = சென்று பார்த்தார்

d)

இது + பென்சில் = இது பென்சில்

26.

கீழ்க்கண்ட சொற்களில் எது தவறாகப் புணர்ந்துள்ளது?

a)

வரம் + தா= வரந்தா

b)

பொன் + தோடு = பொற்றோடு

c)

சிறுமை + ஊர்= சிறுவூர்

d)

கண் + செவி= கட்செவி

27.

" நான் நண்பர்களுடன் இரவு உணவுக்கு வெளியே செல்கிறேன்" என்றார் அப்பா.

a)

தன்மை , முன்னிலை

b)

படர்க்கை , முன்னிலை

c)

தன்மை , படர்க்கை

d)

முன்னிலை , படர்க்கை

28.

சிவா ! இங்கே வா. இந்த நீரை செடிகளுக்கு ஊற்று

a)

முதலாம் வேற்றுமை , இரண்டாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை , நான்காம் வேற்றுமை

c)

முதலாம் வேற்றுமை , எட்டாம் வேற்றுமை

d)

எட்டாம் வேற்றுமை , நான்காம் வேற்றுமை

29.

சரியான அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

"நாங்கள் நாளைக்கு மலாக்கா செல்கிறோம்," என்றான் இரவி.

a)

தாங்கள் மறுநாள் மலாக்கா செல்லவிருப்பதாக இரவி கூறினான்.

b)

"தாங்கள் மறுநாள் மலாக்கா செல்லவிருப்பதாக இரவி கூறினான்.

c)

அவர்கள் நாளைக்கு மலாக்கா செல்லவிருப்பதாக இரவி கூறினான்.

d)

நாங்கள் மறுநாள் மலாக்கா செல்வதாக இரவி கூறினான்.

30.

இலையுதிர்ந்தது

a)

இயல்புப் புணர்ச்சி

b)

தோன்றல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

கெடுதல் விகாரம்