Font size
WorksheetsPJPK 2021
Total questions: 30
Worksheet time: 30mins
எது போதைப் பொருள்களின் வகைகள் அல்ல?
வெண்சுருட்டு
மது
சாக்லெட்
ஹரோயின்
இப்படம் எதை குறிக்கிறது?
புகை பிடிப்பது உடலுக்கு நல்லது.
புகை பிடிக்காதே!
உள்ளிழுத்தல்
மன அழுத்தத்தின் விளைவுகள் என்ன?
பசியின்மை
படபடப்பு, நடுக்கம்
தனிமையை விரும்புதல்
தன்னம்பிக்கை இழத்தல்
நிறைய சாப்பிடுதல்
1. இவை தாக்குதல் சார் விளையாட்டுகளில் ஒன்றல்ல.
காற்பந்து
பூப்பந்து
ரக்பி
ஹக்கி
1. முடைப்பந்து விளையாட்டில் அனுப்புதல், தாக்குதல், தடுத்தல் திறன்களுக்குக் கைகளைத் தவிர்த்து உடலில் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்தலாம்.
இக்கூற்று சரியா அல்லது பிழையா?
சரி
பிழை
1. ஓட்டக்காரர்கள் ஒவ்வொருவாராகப் பேட்டனைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து ஓடி, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அடுத்தவரிடம் ஒப்படைப்பர். அணியின் கடைசி ஓட்டக்காரர், விரைந்து ஓடி இறுதிக் கோட்டைத் தொடுவர். இந்த ஓட்டத்தின் பெயர் என்ன?
பேட்டன் ஓட்டம்
விரைவு ஓட்டம்
தடை ஓட்டம்
அஞ்சல் ஓட்டம்
1. விளையாடும் போது தசைகளில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, நாம் முறையான _______________________ பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம்.
தணித்தல்
வெதுப்பல்
1. மிதிச் சவாரிப் (cycling) பயிற்சி இதயம் வலிமையாக இருப்பதற்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். இக்கூற்று சரியா அல்லது பிழையா?
சரி
பிழை
தொற்றா நோய்களைத் தெரிவு செய்க
இருதய நோய்
ஆஸ்துமா நோய்
சிறுநீரகப் பாதிப்பு
காய்ச்சல்
மாணவர்களிடையே காணப்படும் சமூகச் சீர்கேடுகள் ஆகும்.
பசை நுகர்தல்
பள்ளிக்கு மட்டம் போடுதல்
புகைத்தல்
திருடுதல்
மனக்குழப்பத்தைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை?
நண்பர்களுடன் உரையாடுதல்
போதுமான ஓய்வு
குறைவான தூக்கம்
இறை வழிபாடு
மது போதையை ஏற்படுத்தக் கூடிய ஓர் இரசாயனத் திரவம் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும்.
சரி
தவறு
மதுவினால் ஏற்படும் நீண்ட கால விளைவுகளை ஆகும்.
பார்வை மங்கும்
பக்கவாதம்
வயிற்றுப்போக்கு
குடல் புண்
பருவக் காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவை?
எடை குறையும்
உயரம் அதிகரிக்கும்
முகப்பரு வரும்
உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனை (SEGAK) மேற்கொள்ளும் பயிற்சிகள் யாவை?
மேசை மீது ஏறி இறங்குதல்
கைகளை ஊன்றி எழுதல்
முழங்காலை மடக்கி எழுதல்
கைகளை முன்னோக்கிச் செல்லுதல்
தரையில் குதித்தல்
உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனை (SEGAK) ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நடத்தப்படும்.
சரி
தவறு
உறுதியான தசைகளால் நாம் ஒரு பொருளைச் சுலபத்தில் தூக்கவோ, தள்ளவோ, இழுக்கவோ முடியும்.
சரி
தவறு
சுறுசுறுப்பை வளர்க்கும் முக்கியக் கூறுகள் ஆகும்.
உயிர்வளிக் கொள்திறன்
தசைநார் உறுதி
நெகிழ்வுத் தன்மை
தசைநார் வலிமையின்மை
உடல் அமைப்பு
உடற்பயிற்சிக்குப் பின் போதுமான அளவு நீர் பருக வேண்டும். நீர் பற்றாக்குறை ஏற்பட்டால்.................. ஆகியன ஏற்படும்.
இறப்பு
தலைச்சுற்றல்
தசைப் பிடிப்பு
அதிக களைப்பு
உற்சாகம்
கூடாரம் அமைக்கத் தேவையான உபகரணங்களைத் தெரிவு செய்க.
கத்தி
கூடாரம்
மேல் விரிப்பு
கயிறு
உருள் கோல்கள்
நடுத்தர வயதினர் எப்பிரிவில் அடங்குவர்?
40 முதல் 59 வயது வரை
20 முதல் 39 வயது வரை
10 முதல் 19 வயது வரை
பாய்தல் வகைகளுள் ஒன்று ஆகும்.
உயரம் பாய்தல்
நீளம் பாய்தல்
புரதச் சத்துக் கொண்ட உணவு வகைகள்.
சோயா பீன்ஸ்
யோகர்ட், சீஸ்
பருப்பு வகைகள்
முட்டை
கீரை
உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ..........
உடற்பயிற்சி செய்ய வேண்டும்
போதுமான உறக்கம்
இறை வழிபாடு
சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்
மருந்துகளை அதிக ___________ இடத்தில் வைப்பதால் அதன் தன்மை மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.
குளிர்ச்சியான
வெப்பமான
வலைச் சார் விளையாட்டுகளைத் தெரிவு செய்க.
பூப்பந்து விளையாட்டு
டென்னிஸ் விளையாட்டு
முடைப்பந்து விளையாட்டு
மென்பந்து விளையாட்டு
நாம் உணவு வாங்கும் போது கீழ்க்காணும் கூறுகள் இருந்தால்,அவ்வுணவை வாங்குவதைத் தவிர்க்கவும்.
துருப்பிடித்த கலன்
ஈரமான பொட்டலம்
நெளிந்த கலன்
காலாவதியாகும் திகதி
உணவுக் கூம்பகத்தின்படி உணவை உட்கொள்ள வேண்டும்.இக்கூற்றை உணர்த்தும் விடையைத் தெரிவு செய்க.
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு உண்ண வேண்டும்.
புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு உண்ண வேண்டும்.
ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளை குறைந்த அளவு உண்ண வேண்டும்.
மாவுச் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு உண்ண வேண்டும்.
உங்களைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
சரி
தவறு
யாராவது உங்களிடம் தவறாக நடக்க முயன்றால் உடனடியாக உங்களது பெற்றோர் அல்லது நம்பிக்கையானவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
சரி
தவறு
