Worksheetsபிசிராந்தையார் நாடகம் புதிர்க்கேள்விகள்
Total questions: 22
Worksheet time: 22mins
பிசிராந்தையார் பிறந்த ஊர் யாது?
(a)
பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவரின் பிறந்த ஊர் யாது?
(a)
பிசிராந்தையார் நாடகத்தின் காலப்பின்னணி என்ன?
சங்க காலம்
சோழர் காலம்
பாண்டியர் காலம்
மூவேந்தர் காலம்
பிசிராந்தையார் நாடகத்தின் 2 இடப்பின்னனியைத் தெரிவு செய்க.
பச்சைக்கிளி வீடு
பாண்டிய நாட்டுத் தெரு
சோழ நாட்டுத் தெரு
உறையூர்
பிசிராந்தையார் நாடகத்தின் சமுதாயப் பின்னணியான அரண்மனைச் சமுதாயம் அல்லது ஆள்வோர் சமுதாயம் என்று ஒன்றுள்ளது. ஆள்வோர் சமுதாயத்தில் இருக்கும் இருவரைக் குறிப்பிடுக.
யானை ஏன் ஓடையில் விழுந்தது?
பலகை முறிந்ததால் ஓடையில் விழுந்தது.
உடைந்த பலகை யானையின் எடையைத் தாங்க இயலவில்லை
யானை கால் தவறி விழுந்தது.
மக்கள் நல்லவராகவும் செல்வராகவும் இருந்தால் போதாது என்று பிசிராந்தையார் ஏன் எண்ணுகிறார்?
தாமரைக்குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த பச்சைக்கிளியின் உடல் ஏன் சேறானது?
பிசிராந்தையார் நாடகத்தில் இடம்பெற்றுள்ள தூயன் எனும் கதைப்பாத்திரம் எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
சோழ நாடு
பாண்டிய நாடு
சேர நாடு
தென்னாடு
தூயன் எதற்குப் பாண்டிய நாட்டிற்கு வந்த காரணத்தைப் பச்சைக்கிளி தாயிடம் கூறினான். அவர் கூறிய காரணத்தைத் தெரிவு செய்க.
பாண்டிய நாட்டின் அழகைப் இரசிக்க
பச்சைக்கிளி வீட்டில் தங்கிப்போக விரும்புவது
பச்சைக்கிளியை மணக்க அவளது தாயிடம் கேட்டல்
பாண்டிய மன்னனைச் சந்திக்க
அமைச்சரின் தூக்குத் தண்டனை ஏன் நிறுத்தப்பட்டது?
வலையில் சிக்கிய பெரிய பெட்டியில் என்ன இருந்தது?
பாண்டியன், பிசிராந்தையார், மேற்படியார் ஆகியோர் மரம், மட்டைகளில் ஏன் மறைந்து கொண்டனர்?
ஓடைப்பூ என்ன வேண்டி உடையப்பனிடம் பாடல்கள் பாடினாள்?
உடையப்பன் வீசிய வலையில் சிக்கிய பெரிய பெட்டியில் என்ன இருந்தது?
பிசிராந்தையார் தம் பேரனுக்கு என்ன பெயரிட்டார்?
பிசிராந்தையார் தன் பேரனுக்குத் தன்னுடைய உற்ற நண்பரின் பெயரைப் பெயரிடக் காரணம் என்ன?
பிசிராந்தையார் நாடகத்தில் பெண் கதைப்பாத்திரங்கள் இருவரைக் குறிப்பிடுக.
பிசிராந்தையார் நாடகத்தில் இருக்கும் பாண்டிய மன்னனின் பெயரைக் குறிப்பிடவும்.
குளக்கரையில் கரடியிடமிருந்து பச்சைக்கிளியைக் காப்பாற்றியவர் யார்?
தூயன்
மேற்படியார்
மான்வளவன்
மணியிடை
பிசிராந்தையார் நாடகத்தின் கருப்பொருளைத் தெரிவு செய்க.
அறம் செய்தல்
நல்லதையும் தீயவையும் அறிதல்
நட்பு
அறமும் உயர்நட்பும்
1. இரக்க குணம் படைத்தவர்
2. மக்கள் நலன் பேணுபவர்
3. பொய்த் தகவல்களை நம்பாதவர்
மேற்காணும் பண்புக்கூறுகள் யாரைக் குறிக்கிறது?
பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி
பிசிராந்தையார்
மேற்படியார்
அணிச்சை
