Worksheetsபுதிர்ப்போட்டி ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காண்பவனவற்றுள் எது தவறான இணை ?
ஆத்திச்சூடி - ஔவையார்
வெற்றி வேற்கை - உலகநாத பண்டிதர்
உலகநீதி - உலகநாத பண்டிதர்
புதிய ஆத்திச்சூடி - பாரதியார்
உவமைத் தொடரின் சரியான பொருள் எது?
மலரும் மணமும் போல
எப்பொழுதும் ஒற்றுமையாக இருத்தல்
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல்
விட்டுப் பிரியாமை
சண்டையிட்டுக் கொள்ளுதல்
கொடுக்கப்பட்டுள்ள மொழியணிகளைப் பூர்த்திச் செய்க.
1. ---------------------------------------------- தான் தர வருமே
சொல்ல வேண்டாம்
நிறுத்த வேண்டாம்
பெருமையும் சிறுமையும்
கல்விக்கழக
கீழ்க்காணும் செய்யுளை நிரல்படுத்துக.
i - ஈசன் எந்தை இணையடி நீழலே.
ii - மாசில் வீணையும் மாலை மதியமும்
iii - மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
iv - வீசு தென்றலும் வீங்(கு) இள வேனிலும்
ii , iv , iii , i
ii , iii , iv , I
iv , iii , ii , i
iv , ii ,iii, , i
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
இராமன் கங்கை கரைக்குச் சென்று, குகனைச் சந்தித்தார்.
முதலாம் , நான்காம்
இரண்டாம் , நான்காம்
நான்காம் , ஐந்தாம்
நான்காம், இரண்டாம்
கோடிட்ட இடத்தில் ஓர் , ஒரு எழுதுக.
1 . கந்தன் …………. வீடு கட்டினான்.
2. இது …………..ஆலமரம்.
3. அமுதா …………. பானை வாங்கினாள்.
1. ஒரு
2. ஓர்
3. ஒரு
1. ஓர்
2. ஓர்
3. ஒரு
1. ஒரு
2. ஒரு
3. ஓர்
சரியான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.
வழித் தவறிய மாலன் பாதை தெரியாது _____________வென விழித்தான்.
சர சர
தக தக
நர நர
திரு திரு
இலக்கணப் பிழையுடைய சொல் எது ?
அரசன் தன் வாலால் எதிரியைத் தாக்கினான்.
அரசன்
தன்
வாலால்
எதிரியைத்
தாக்கினான்
சரியான ஆண்பால் , பெண்பால் இணையைத் தெரிவு செய்க.
கணவன் - கனைவி
குயவன் - குயத்தி
செம்படவன் - செம்படவி
பெரியப்பா - சிற்றப்பா
இனவெழுத்துச் சொல்லைக் கொண்டுள்ள படத்தைத் தெரிவு செய்க
கீழ்க்கண்ட உரையாடலுக்குப் பொருந்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
வளவா, ஏன் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருக்கிறாய்? சிறு வயதில் படித்தால்தான் மனதில் ஆழமாகப் பதியும் என்று உனக்குத் தெரியாதா?
எலியும் பூனையும் போல
காட்டுத் தீ போல
கண்ணினைக் காக்கும் இமை போல
சிலை மேல் எழுத்து போல
இனவெழுத்துகள் மொத்தம் எத்தனை?
2
7
6
5
நம் தாயகத்தின் ....... பாதுகாப்பது நமது முக்கியக் கடமையாகும்.
இன்ப துன்பங்களைப்
அருமை பெருமைகளைப்
குறை நிறைகளைப்
கல்வி கேள்விகளைப்
சூழலுக்கேற்ற இணைமொழி யாது ?
திரு. காளிதாஸ் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
அண்டை அயலார்
வாக்கியத்தில் விடுபட்ட இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
இராமனது இலங்கைப் பயணம் கடலால்
தடைப்பட்டது. ____________________
இராமன் சிறிதும் மனந்தளரவில்லை.
எனவே
மேலும்
இன்னும்
இருப்பினும்
பின்வருவனவற்றுள் எந்தத் தொடர் வலிமிகும்?
அப்படி + செய்
எவ்வளவு + பணம்
இத்தனை + காலம்
என்று + போனான்
நூறு மீட்டர் ஓட்டத்தில் _______(1)_____ ஓடி வந்த புவனா ______(2)_____ அந்தக் கோப்பையைப் பரிசாகப் பெற்றாள். அதைக் கண்ட பொது மக்கள் ______(3)_____ கைத்தட்டினர்.
சரியாக
அழகாக
வேகமாக
வேகமாக
அழகான
பலமாக
மெதுவாக
அழகான
பெருமையுடன்
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்குச் சாகாத் தன்மையைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஏவா மக்கள் மூவா மருந்து
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருள் என்ன ?
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
நண்பர்கள்
உறவினர்கள்
பகைவர்கள்
அண்டை அயலார்
கூற்றுக்கு ஏற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
நீதி தவறிய மன்னா! என் கணவன் கள்வன் அல்ல. தீர விசாரிக்காமல் என் கணவனைக் கொன்ற நீர் நீதிநெறியோடு ஆட்சி புரியவில்லை.
A. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
B. மன்னர்க் கழகு செங்கோன் முறைமை.
C. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
