NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு_4
Total questions: 20
Worksheet time: 7mins
என் பாட்டி தினமும் காலையில் வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பார். அவர் இன்று காலை ____________ நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டு மகிழ்ந்தார்.
ஒளிபரப்பான
ஒலிபரப்பான
மல்லிகா பொங்கல் தினத்தன்று வண்ணப் பொடிகளைக்கொண்டு வாசலில் பெரிய ____________ போட்டாள். அதன் அழகைக் கண்ட பக்கத்துவீட்டுக்காரர் அவளைப் பாராட்டினார்.
கோலம்
கோளம்
“மீனா, உன் தம்பி பேனாவைக் கண்டால் எடுத்துக் கிறுக்குவான். அதை அவன் கண்ணில் படாமல் ____________ வை,” என்றார் என் தந்தை.
ஒழித்து
ஒளித்து
புறா ஒன்று வேடன் வைத்த ____________ ஒன்றில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ணுற்ற வாசுகி அதனை உடனே விடுவித்தாள்.
பொறி
பொரி
என் பள்ளிக்கு அருகே இருக்கும் அங்காடி நிலையத்தில் இளையர்கள் கூடுவது வழக்கம். நேற்று அவர்கள் கூடியபோது, கருத்து வேற்றுமையின் காரணமாக அவர்களுக்கிடையே ____________ ஏற்பட்டது.
கழகம்
கலகம்
தூய்மையற்ற சுற்றுச்சூழலால் எலிகளின் தொல்லை அதிகரித்தது. பலர் பெருமுயற்சி செய்து ____________ பதுங்கியிருந்த எலிகளைப் பிடித்தனர்.
வலைகளில்
வளைகளில்
மாறன் நோயின் காரணமாகப் பல நாள்கள் சரிவர உணவு உண்ணவில்லை. அதனால், அவன் ____________ இழந்து காணப்பட்டான்.
வலு
வழு
என் அம்மா திருமணத்திற்குக் கிளம்பியபோது அவருடைய மூக்குத்தி கீழே விழுந்துவிட்டது. அதை ____________ முடுக்கெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை.
மூளை
மூலை
ஆசிரியர், தமிழ் மாதங்களைப் பற்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது நான்
அவரிடம் என் பிறந்தநாள் ____________ மாதத்தில் வருவதாகக் கூறினேன்.
ஆணி
ஆனி
ஏழைப் புலவர் ஒருவர் மன்னரைக் காணச் சென்றிருந்தார். மன்னர் புலவரின் நிலை அறிந்து மனம் ____________ அவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.
இறங்கி
இரங்கி
தமிழ்மொழி கலாசார முகாமில் பல பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன. நான்
____________அடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன்.
உரி
உறி
மாலதிக்குச் சிவப்பு ரோஜா என்றால் ____________ ஆசை. அதனால், அவள் தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியை நட்டு வைத்தாள்.
கொள்ளை
கொல்லை
நாட்டுத் தலைவர்கள் ____________ தவறாது மக்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக இருக்க வேண்டும். அத்தகையோரை மக்கள் மதித்துப் போற்றுவர்.
நெரி
நெறி
தாய்லாந்து நாட்டில் நீளமான ____________ கொண்டு ஒருவகை நடனம் ஆடப்படுகிறது. அது சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.
கோல்களை
கோள்களை
முதியோர்கள் மின் மோட்டார் சைக்கிள்களைத் தற்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் மூலம் அவர்கள் தங்கள் குடியிருப்பு வட்டாரத்தில் ____________ வருகிறார்கள்.
வலம்
வளம்
அல்லி கால் இடறிக் கீழே விழுந்தாள். நல்ல ____________! அவளுக்குப் பலமான காயம் ஏதும் ஏற்படவில்லை.
வேலை
வேளை
புனிதன் தன் பிறந்தநாளைக் கொண்டாடினான். அப்போது அவனுடைய நெருங்கிய தோழர்கள் அவன் பெயர் ____________ பேனாவைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
பொறிக்கப்பட்ட
பொரிக்கப்பட்ட
என் தாயார் மல்லிகை மலர்களை மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மலர்களின் ____________ வீடெங்கும் பரவியது.
மணம்
மனம்
இளநீர் தாகத்தை ____________ உற்சாகம் அளிக்கும். அதனால், வெயில் காலங்களில் மக்கள் அதை அதிகம் வாங்கிப் பருகுகிறார்கள்.
தனித்து
தணித்து
இவ்வாண்டு மே 22-ஆம் தேதியன்று யூஸ் ரீனா என்னும் சிங்கப்பூர்ப் பெண்மணி எவரஸ்ட் மலை உச்சியை அடைந்தார். அவரது ____________ முயற்சியை அனைவரும் பாராட்டினார்கள்.
அறிய
அரிய
