NEW
Font size
Worksheetsபழமொழி படிவம் 1
Total questions: 8
Worksheet time: 4mins
பின்வரும் சூழலுக்கு ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.
இளங்கோ ஒரு புத்தகப்புழு. அவன் எப்போதும் நூல் நிலையத்திலேயே குடியாய் இருப்பான். அவனிடம் பொது அறிவு தொடர்பான எந்தக் கேள்வியைக் கேட்டாலும் உடனே அதற்கான பதிலைத் தருவான்.
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
தன் கையே தனக்கு உதவி
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
பின்வரும் உரையாடலுக்கு ஏற்ற மிகச் சரியான பழமொழியைத் தெரிவு செய்க.
அகிலா : தற்போது நம் மாணவர்கள் கதைப் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்களே!
கோமளா : உண்மைதான். சிறு வயது முதலே வாசிக்கும் பழக்கத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து வந்தால் நாளடைவில் அதுவே வழக்கமாகிவிடுமே!
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
பழமொழி மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும் என்பதற்கேற்ப குமார் வயதில்
மூத்தோரை மதிக்கும் பண்பைக் கொண்டவன்.
தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதை உணர்ந்த குமுதா,சுயமாகத் தொழில் செய்தாள்.
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் என்பதற்கொப்ப தாரணி தன் சேமிப்புப் பணத்தைக் கொண்டு புதிய வீடு கட்டினாள்.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் என்பதற்கொப்ப நந்தினி பல நூல்களைக் கற்று, அறிஞராகத் திகழ்ந்தாள்.
கீழ்க்காணும் சூழலுக்கேற்றபழமொழியைத் தெரிவு செய்க.
நடனப் போட்டியில் தோல்வியுற்ற கண்மணி, தன் தோல்விக்கு நடுவரைக் காரணம் காட்டினாள்.
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கீழ்க்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
முதுமையிலும் தன் தேவைகளுக்குத் தன் தோட்டத்தில் பயிர்செய்த காய்கறிகளை விற்றுப் பணம் ஈட்டுகிறார் அந்த மூதாட்டி
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
தன் கையே தனக்கு உதவி
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
கோடிட்ட இடத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
_________________________என்பது போல இளம் வயது முதற்கொண்டு குமணன் சிறுகச் சிறுக சேமித்த பணம் இன்று அவனின் உயர்கல்விக் கட்டணம் செலுத்த பேருதவியாக உள்ளது.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
தன் கையே தனக்கு உதவி
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
கீழ்க்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சிறுவயது முதல் இன்று வரை புவனேஸ்வரி சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறாள்.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை.
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் - ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்
தன் கையே தனக்கு உதவி - ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் பெருந்தொகையாகிவிடும்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் - ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள்
முழுவதும் தொடரும்.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் - ஒருவர் முதுமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள்
முழுவதும் தொடரும்.
