Font size
Worksheetsபழமொழி படிவம் 5
Total questions: 10
Worksheet time: 3mins
1. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இப்பழமொழியின் பொருள் என்ன?
அ. சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பாண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.
ஆ. நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.
இ. மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.
2. ________________________________ என்பதற்கேற்ப துருவன் சாலை விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்தான்.
அ. தர்மம் தலை காக்கும்
ஆ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
இ. தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை
ஈ. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்
3. "சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்". இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி எது?
அ. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்
ஆ. தர்மம் தலை காக்கும்
இ. மனக்கவலை பலக் குறைவு
ஈ. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்
4. தேர்வில் சிறந்து விளங்கும் ராணியுடன் நப்புக்கொண்ட வாணி _____________________ என்பதற்கேற்ப இவ்வாண்டு தமிழ்மொழிப் பாடத் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றாள்.
அ. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்
ஆ. கெடுவான் கேடு நினைப்பான்
இ. சைகை அறியாதவன் சற்றும் அறியான்
ஈ. மின்னுவதெல்லாம் பொன்னல்ல
5. நிமலனை ஆபத்தான சிக்கலில் மாட்டி விட நினைத்த திவாகர் ____________________ என்பதற்கேற்ப தான் போட்ட தந்திர வலையில் தானே சிக்கிக் கொண்டு செய்வதறியாது விழித்தான்.
அ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ஆ. மனக்கவலை பலக் குறைவு
இ. கெடுவான் கேடு நினைப்பான்
ஈ. தர்மம் தலை காக்கும்
6. நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம். போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. துணை போனாலும் பிணை போகாதே
ஆ. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்
இ. மனக்கவலை பலக் குறைவு
ஈ. கெடுவான் கேடு நினைப்பான்
7. துணை போனாலும் பிணை போகாதே. இப்பழமொழியின் பொருள்?
அ. நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால், அவர் உதவி பெறும் பொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது.
ஆ. வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.
இ. மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.
ஈ. சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.
8. வினோத் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் ________________________ என்பதற்கேற்ப அவன் கடந்த காலத்தில் உதவி செய்த நண்பர்கள் அனைவரும் இன்று அவனுக்கு உதவி செய்தார்கள்.
அ. சைகை அறியாதவன் சற்றும் அறியான்
ஆ. கெடுவான் கேடு நினைப்பான்
இ. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்
ஈ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
9. சீதா குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொண்டதால் ________________ என்பதற்கேற்ப படிப்பில் முழு கவனம் செலுத்தாமல் வீழ்ச்சி அடைந்தாள்.
அ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ஆ. மனக்கவலை பலக் குறைவு
இ. துணை போனாலும் பிணை போகாதே
ஈ. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
10. கெடுவான் கேடு நினைப்பான். இப்பழமொழியின் பொருளைக் கண்டறிக.
அ. நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்.
ஆ. நாம் செய்கின்ற அறச்செயல்கள் நமக்குத் துன்பம் நேர்கின்ற பொழுது நம்மைக் காத்து நிற்கும்.
இ. மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.
ஈ. வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.
