NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு-மிள்பார்வை கேள்விகள்
Total questions: 12
Worksheet time: 6mins
ஐம்புலன்களைக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அல்லது நிகழும் சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிந்து திரட்டுவது _________________ எனப்படுகிறது.
உற்றறிதல்
ஊகித்தல்
வகைப்படுத்தல்
முன் அனுமானம்
பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர
பரிசோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது.
ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.
இரசாயனக் கழிவுகளைச் சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் அறிவியல் அறையில் உணவு உண்ணக்கூடாது.
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது நுண்ணுயிர் வாழ்க்கை செயற்பாங்கு அல்ல ?
நகர்தல்
சுவாசித்தல்
வளர்த்தல்
நீளமாகுதல்
பின்வருவனவற்றுள் எதில் தொற்றுநோய் பரவலின் காரணிகள் சரியாக இணைக்கப்பட்டுள்ளது ?
கண்ணோய் - காற்று
வயிற்றுப் போக்கு - விலங்கு
அம்மை - தொடுதல்
ஏடிஸ் - நீர்
பின்வருவனவற்றுள் எது தனித்து வாழும் விலங்கு ஆகும் ?
குரங்கு
புலி
யானை
சிங்கம்
விலங்குகள் கூட்டமாக வாழ்வதால் ஏற்படும் தீமை என்ன?
அடிப்படைத் தேவைகளுக்காக போராட்டம் ஏற்படும்.
உணவை ஒன்றாகத் தேட முடியும்.
பாதுகாப்பிடத்தை ஒன்றாகத் தேட முடியும்.
இனவகை நீடுநிளவலை உறுதி செய்கிறது.
பின்வருவனவற்றுள் எது விலங்குகளிடையே போராட்டம் நிகழ்வதற்குக் காரணம் அல்ல ?
இணை
காற்று
உணவு
இருப்பிடம்
பின்வருவனவற்றுள் எது முற்றழிந்த விலங்குகள் ஆகும் ?
மலாயா புலி , டுகோங்
தாப்பீர் , ஜாவா மயில்
ஓராங் ஊத்தான் , கடலாமை
மாமுத் , குவாகா
புணரமைத்தல் என்றால் என்ன ?
காடுகள் அமைத்தல்.
உயிரினங்களை முற்றழிவிலிருந்து பாதுகாத்தல்.
அழிந்துபோன சூழலை மீண்டும் மீட்டெடுப்பதாகும்
இருப்பதை அழிக்காமல் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகும்.
பின்வருவனவற்றுள் எது பராமரித்தல் மற்றும் புணரமைத்தல் நடவடிக்கை அல்ல ?
கடலாமைகளின் முட்டைகளை வியாபார நோக்கத்திற்காக விற்றல்.
மறுநடவு செய்தல்.
பாதுகாக்கப்பட்ட காடுகளை அமைத்தல்
பராமரிப்பு மையங்கள் உருவாக்குதல்.
பின்வருவனவற்றுள் எது தள்ளுதல் நடவடிக்கையைக் குறிக்கின்றது ?
கிணற்றில் நீர் இறைத்தல்
கயிறு இழுத்தல்
கேரம் விளையாடுதல்
சாயம் பூசுதல்
பின்வருவனவற்றுள் எது உந்துவிசையின் விளைவு அல்ல ?
ஒரு பொருளின் வடிவத்தை மாற்றாது.
நகராப் பொருளை நகர்த்தும்.
நகரும் பொருளின் திசையை மாற்றும்
நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்
