NEW
Font size
Worksheetsதமிழ் இலக்கணம் வலிமிகா இடங்கள் (இரா. சத்தியவாணி)
Total questions: 10
Worksheet time: 5mins
'அடுக்கும்படி சொன்னார்' இச்சொற்றொடரில் வலிமிகாமைக்குக் காரணம் என்ன?
வினையெச்சங்களின் பின் வலிமிகொது.
'படி' சேர்ந்து வரும் வினையெச்சங்களின் பின் வலிமிகாது.
வினா எழுத்தின் பின் வலிமிகாது.
'படி' சேர்ந்து வரும் வினைமுற்றின் பின் வலிமிகாது.
'சுட்டுப் பெயர்களின் பின் வலிமிகொது'. இதனை விளக்கும் தொடர் யாது?
இது புத்தகம்
இவ்வளவு பெரிய
இன்று கண்டான்
இது குமரன்
இவற்றுள் எவை வலிமிகா விதியைக் கொண்டுள்ளவை?
படி, அந்த, இது
சில, அங்கு, படி
பல, இங்கு, படி
சில, படி, அது
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வலிமிகாத சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
அந்த பையன்
எங்கு படித்தாள்
பல பறவைகள்
பல மாணவர்கள்
பூந்தோட்டத்தில் நுழைந்த எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. --------------------- செழிப்பாக வளர்ந்திருந்தன. கோடிடப்பட்ட இடத்தில் சரியான சொற்றொடரைத் தேர்ந்ச்தெடுக.
சில சில மரங்கள்
பல செடிகள்
பலச் செடிகள்
பலத் தாவரங்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
அப்பா செல்வியைத் தினமும் பள்ளிக்கு அண்ணனுடன் ________________________ கூறினார்.
போகும் படி
போகும்ப் படி
போகப் படி
போகும்படி
சரியான வலிமிகாத் தொடரைத் தேர்ந்தெடுக.
கேட்கும்படி + பணித்தார்
எழுதும் படி + சொன்னார்
புத்தகம்படி + சொன்னார்
உண்ணும் படி + கூறினார்
சரியாகச் சேர்த்து எழுதிய சொற்றொடரைத் தேர்ந்தெடுக.
அது + கட்டம் = அது கட்டம்
இது + பெரியது = இதுபெரியது
இது + மருத்துவர் = இது மருத்துவர்
எது + சரி = எதுச் சரி
சரியான வலிமிகா விதியைக் கண்டறிக.
சொற்றொடர்களில், வருமொழி க்,ச்,த்,ப் ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகும்
வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால்தான் வல்லினம் மிகும்.
சொற்றொடர்களில் வருமொழி க்,ச்,த்,ப் ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வலிமிகாது.
சொற்றொடர்களில் வருமொழி க்,ச்,த்,ப் ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் வருமொழியின் சில இடங்களில் வலிமிகும்.
கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் சரியான வலிமிகா விதியைக் கொண்ட பதிலைத் தேர்ந்தெடுக.
நமது நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் எந்நேரமும் பேணும்படிக் கேட்டு பிரதமர் அவர்கள் தமது உரையை நிறைவு செய்தார்.
கல்வியில் மாணவர்களின் கவனம் குறையும்படி செய்யும் திறன் பேசிகளின் பயன்பாட்டைப் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வைப்பது சிறப்பாகும்.
விமலா ஆசிரியர் கற்றுக்கொடுத்தப் படி நடனம் ஆடினாள்.
முகிலன் படிபடியாக வாழ்க்கையில் முன்னேறி வெற்றிப்படியை அடைந்தான்.
