wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் நீடுநிலவல் என்பதன் சரியான பொருள் எது?

a)

விலங்கின் இனவிருத்தி

b)

விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன

c)

விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு

d)

தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்

2.

எந்தத் தாவரக் குழுவின் விதை நீரின் மூலம் பரவுகிறது?

a)

லாலாங், மெராந்தி

b)

தாமரை, பொங்பொங்

c)

ஜம்பு, மிளகாய், தக்காளி

d)

காசித்தும்பை, இரப்பர்

3.

கீழ்க்காணும் உயிரினங்களில் எஃது பயனிட்டாளர் அல்ல?

a)

ஆந்தை

b)

மீன்

c)

முட்டைப்புழு

d)

நீர்பாசி

4.

நாம் ஏன் அறிவியல் அறையின் விதிமுறைகளையும் தூய்மையையும் பேண வேண்டும்?

a)

ஆசிரியரின் பாராட்டைப் பெறுவதற்காக

b)

அறிவியல் அறை அழகாக இருப்பதற்காக

c)

ஈக்கள் மொய்வதைத் தவிர்ப்பதற்காக

d)

விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக

5.

நீரில் வாழும் ஒரு நுண்ணுயிர்____

a)

அல்கா

b)

பூஞ்சணம்

c)

குச்சியம்

d)

நச்சியம்

6.

அம்மை ஒரு வகை பரவும் நோயாகும். இந்நோய் எவ்வாறு பரவுகிறது?

a)

தும்மல் வழி

b)

உணவின் வழி

c)

தொடுதல் வழி

d)

இரத்தத்தின் வழி

7.

கூட்டு இயந்திரம் என்றால்_________.

a)

இணைந்த கம்பிகள் போன்றது.

b)

நெம்புகோல் போன்ற வடிவத்தைக் கொண்டது.

c)

ஒன்றிற்கும் மேற்பட்ட எளிய இயந்திரங்கள் சேர்ந்தது.

d)

மனிதர்களுக்கு விரைவில் பயனுள்ள வழியில் உதவக்கூடிய இயந்திரம்,

8.

குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும். ஏன் இந்த விலங்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தின் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறது/

a)

தன் இனத்தை அதிகரிக்க

b)

உணவு பெறுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்

c)

உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த

d)

உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த

9.

பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?

a)

எறும்பு

b)

சிங்கம்

c)

புலி

d)

கழுதை

10.

நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.

a)

சொத்தைப் பல் உண்டாக்குதல்

b)

நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது

c)

உணவைக் கெடச் செய்கிறது

11.

கீழ்காணும் நடவடிக்கை அதிக வேகத்தைக் கொண்ட நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
12.

கீழ்காண்பனவற்றுள் எஃது உந்து விசையின் விளைவு அல்ல ?

a)

பொருளின் வடிவத்தில் மாற்றம்

b)

பொருளின் வேகத்தில் மாற்றம்

c)

பொருளின் அளவில் மாற்றம்

d)

பொருளின் நகரும் திசையில் மாற்றம்

13.

சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?

a)

வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.

b)

உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.

c)

மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.

d)

உயிரிழப்பு

14.

எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?

a)

சீனி சேர்க்கப்பட்டதால்.

b)

உப்பு சேர்க்கப்பட்டதால்.

c)

வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.

d)

உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்

15.

கீழ்க்காணும் பிராணிகளுள் எவை வெட்டுக்கிளியைப் போல் சுவாசிக்கின்றன?

a)

தலைப்பிரட்டை மற்றும் கரடி

b)

கொசு மற்றும் தவளை

c)

வண்ணத்துப்பூச்சி மற்றும் கரப்பான் பூச்சி

d)

புழு மற்றும் பட்டுப் புழு

16.

பின்வரும் எந்த பொருள் மட்கும்?

a)
b)
c)
d)
17.

பூமி தன் அச்சில் சுற்றி வர _______ ஆகிறது?

a)

1 வருடம்

b)

2 நாள்கள்

c)

24 மணி நேரம்

d)

1 மாதம்

18.

பின்வரும் நிலவின் கலைகளில் எது மதிமான நாள்காட்டியில் 15-ஆவது நாளில் தெரியும்?

a)
b)
c)
d)
19.

மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?

a)

கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.

b)

இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய

c)

இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க

d)

கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க

20.

தாவரங்களிடையே போராட்டம்

a)

தாது உப்பு

b)

வசிப்பிடம்

c)

இடவெளி

d)

நீர்

e)

சூரிய ஒளி

21.

படம், தாவரச் செடி வேறொரு மரத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்வதைக் காட்டுகிறது. ஏன் இத்தாவரம் இப்பெரிய மரத்தின் மீது படர்ந்து வாழ்கிறது?

a)

அதிகமான காற்றைப் பெறுவதற்கு

b)

போதிய சூரிய ஒளியைப் பெறுவதற்கு

c)

சுலபமாக மர உச்சி வரை வளர்வதற்கு

d)

மற்ற விலங்குகள் உண்பதைத் தவிர்ப்பதற்கு

22.

உணவு தேடும்போது ஏற்படும் போராட்டத்தைத் தவிர்க்கா ஆந்தை எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும்?

a)

மரத்தில் வசிக்கும் பிராணிகளை மட்டுமே வேட்டையாடும்.

b)

தன் வாழ்விடத்தில் இருந்து அதிக தூரத்தில் வேட்டையாடும்.

c)

இரவில் மட்டுமே வேட்டையாடும்.

d)

மற்ற விலங்குகள் சாப்பிடாத பிராணிகளை வேட்டையாடும்.

23.

படம், வேற்றின விலங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது. படத்தில் காணப்படும் சூழலின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

இணையை பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

b)

உணவைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

c)

வாழிடத்தைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

d)

தனது வலிமையைக் காண்பிக்க விலங்குகள் போராடுகின்றன.