wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கூடா ஒழுக்கம்

Total questions: 10

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்


என்ற திருக்குறளில் வண்ணமிடப்பட்ட சொல் எதனைக் குறிக்கின்றது?

a)

நீர், நிலம், மணல், புகை, ஆகாயம்

b)

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்

c)

கடல், தரை, நெருப்பு, சாரல், ஆகாயம்

2.

பின்வரும் திருக்குறளின் பொருள் யாது?


வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்

தான்அறி குற்றப் படின்

a)

மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.

b)

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும்கடந்து கெட்டு விடும்.

c)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

3.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று


திருக்குறளில் வண்ணமிடப்பட்ட சொற்கள் உணர்த்தும் கருத்து யாது?

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

பசு தோல் போர்த்திய புலி போல

c)

யானை இருந்தாலும் ஆயிரன் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

4.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று


என்ற திருக்குறளில் யார் புதரில் மறைந்து பறவைகளைக் கண்ணி வைத்து பிடிப்பது என்கிறார் திருவள்ளுவர்.

a)

காடன்

b)

தூதுவன்

c)

மறவன்

d)

வேடன்

5.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும்


பற்றற்றேம் என்ற சொல் உணர்த்தும் பொருள் யாது?

a)

பாசத்தைத் துறந்தோம்

b)

பற்றுக்களைத் துறந்தோம்

6.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்


என்ற திருக்குறளின் வழி திருவள்ளுவர் உணர்த்தும் கருத்து....

a)

புதரில் மறைந்து வேடன் பறவைகளைக் கண்ணி வைத்து பிடிப்பது தவறு அதேபோல்

b)

மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவர் போல் நடிப்பவர் இரக்கமில்லாதவர்களுக்குச் சமம்

c)

தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை

d)

பூமியில் மனிதன் தன் உள்ளத்தில் பற்றுக்களை அகற்றாமல் துறந்தவர் போல் நடித்து வாழ்பவர் போன்ற இரக்கமற்றவர் யாரும் இல்லை.

7.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

a)

தான்அறி குற்றப் படின்

b)

முக்கிற் கரியார் உடைத்து

c)

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

8.

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்


வண்ணமிடப்பட்ட சொல்லுக்குப் பொருந்தும் பொருள்களை அடையாளம் காண்க.

a)

ஆட்கள்

b)

மனிதன்

c)

மானிடன்

d)

கால்நடைகள்

9.

பின்வரும் குறளில் திருவள்ளுவர் ஒரு மனிதனின் செயல்வகையை எதன்வழி அறிந்துகொள்ள முடியும் என்கிறார்?


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்

a)

மாண்பு

b)

பண்பு

c)

குணம்

10.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்


இத்திருக்குறளில் தவக்கோலம் புரிபவர்கள் எந்த வேடம் தரிக்க வேண்டாம் என பொய்யாமொழி புலவர் கூறுகிறார்?

a)

அமைதி, சடை பின்னல்

b)

மொட்டை அடித்தல், சடை பின்னல்

c)

புறம் பேசுதல், மொட்டை அடித்தல்