wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் B

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?

a)

எறும்பு

b)

சிங்கம்

c)

புலி

d)

கழுதை

2.

பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர

a)

ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.

b)

அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

c)

கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

d)

பரிச்சோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது

3.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

4.

நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.

a)

சொத்தைப் பல் உண்டாக்குதல்

b)

நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது

c)

உணவைக் கெடச் செய்கிறது

5.

கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?

a)
b)
c)
d)
6.

சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?

a)

வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.

b)

உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.

c)

மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.

d)

உயிரிழப்பு

7.

பூமி தன் அச்சில் சுற்றி வர _______ ஆகிறது?

a)

1 வருடம்

b)

2 நாள்கள்

c)

24 மணி நேரம்

d)

1 மாதம்

8.

படம், ஒரு விலங்கைக் காட்டுகிறது. எவ்வாறு இவ்விலங்கு தன் நீடுநிலவலை உறுதி செய்கிறது?

a)

மணலில் குழி தோண்டி முட்டையிடும்

b)

குஞ்சுகள் பொரியும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும்

c)

அதிகமான முட்டைகளை இடும்

d)

கூடுகள் அமைக்கும்

9.

கீழ்க்காண்பவை அனைத்தும் நுண்ணுயிர்கள். ஒன்றைத் தவிர.

a)

குச்சியம்

b)

புரோத்தோசுவா

c)

பூஞ்சைக்காளான்

d)

பூஞ்சுத்தாள்

10.

உந்து விசையின் விளைவு யாது?

a)

நகராப் பொருளை நகர்த்தும்.

b)

நகராப் பொருளை நகர்த்தாது.

11.

உந்து விசையின் அளவு அதிகரித்தால் பொருளின் வேகம் ____________________.

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

12.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

13.

பின்வரும் நுண்ணுயிரிகளில் எது மிகச் சிறிய அளவைக் கொண்டுள்ளது?

a)

நச்சியம்

b)

குச்சியம்

c)

பூஞ்சணம்

d)

புரோட்டோ சோவா

14.

படம் ஒரே வாழிடத்தில் வாழக்கூடிய இரண்டு விலங்குகளைக் காட்டுகிறது. இவ்விரண்டு விலங்குகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

a)

பரிமாற்று வாழ்வு

b)

கூட்டுயிர் வாழ்க்கை

c)

ஒட்டுண்ணி

d)

வேற்று இணை வாழ்க்கை

15.

எவ்வகை உணவு உடலுக்குத் தீமையை விளைவிக்கின்றது ?

a)

கெட்டுப்போன உணவு

b)

சுவையான உணவு

c)

ஆரோக்கியமான உணவு

16.

கெட்டுப்போன சோற்றின் தவறான தன்மையைத் தெரிவு செய்க...

a)

நிறமாற்றம்

b)

இழையமைப்பில் மாற்றம்

c)

பூஞ்சணம் பூத்தல்

d)

சுவை கூடுதல்

17.

உணவைக் கெடச் செய்யும் நுண்ணுயிர்கள் யாவை?

a)

நச்சியம் , குச்சியம்

b)

குச்சியம் , அமீபா

c)

பூஞ்சணம் , குச்சியம்

d)

குச்சியம் , புரோட்டோசோவா

18.

கரிமக் கழிவுப்பொருளைத் தேர்ந்தெடுக.

a)

பழைய நாளிதழ்கள்

b)

நெகிழிப் புட்டிகள்

c)

ஆடி

d)

எஞ்சிய உணவு

19.

புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள் என்பது....

a)

தொழிற்சாலைகளில் இருந்து வேளியேறும் புகை

b)

ஆடி

c)

உலோகக் கொள்கலன்கள்

d)

எஞ்சிய உணவு

20.

குப்பைகளை முறையாக வீசுவதன்வழி _____________________.

a)

சுற்றுச்சூழல் அசுத்தமாகும்.

b)

சுற்றுச்சூழல் அழகாக காட்சியளிக்கும்.

c)

தூய்மைக்கேடு ஏற்படும்.

d)

நீர்த் தூய்மைக்கேடு ஏற்படும்.