wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 எண்

Total questions: 54

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.

a)

சலசல

b)

மளமள

c)

தகதக

d)

மடமட

2.

திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.

_____________________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

b)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

c)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

d)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

3.

ஈகை திறன் எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

b)

அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

c)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

d)

நலமாக வாழ உடலினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

4.

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

a)

துன்பத்தால் மனம் உருகுதல்

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

c)

ஒரு பொருள் சேதமடைவதை தடுக்க முடியாமை

5.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திசூடி

c)

புதிய ஆத்திசூடி

d)

வெற்றிவேற்கை

6.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

7.

சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


சிறுவயதில் தன் குடும்பத்தை பழிவாங்கிய அந்தப் பயங்கர சாலை விபத்து, சுமதியின் மனதில்_________________ பதிந்து விட்டது.

a)

இலைமறை காய் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

காட்டுத் தீ போல

8.

விடா முயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.


எனக் கூறும் செய்யுள் எது?

a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

9.

கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


சர் சீ.வி. இராமன் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் அறிவியல் பாடத்தை ________________ ஒரு மாமேதை.

a)

ஓட்டை வாயனான

b)

கரைத்துக் குடித்த

c)

காது குத்திய

d)

அள்ளி இறைத்த

10.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஒற்றுமை வலிமையாம்

c)

ஊண்மிக விரும்பு

d)

உடலினை உறுதிசெய்

11.

கேள்வி 21 அ)

சரியான கூற்றை மட்டும் அடையாளமிடுக.

a)

உயிரெழுத்துகள் - 12

b)

உயிர்க்குறில் - 7

c)

மெய்யெழுத்துகள் - 18

d)

ஆய்த எழுத்து - 2

12.

கேள்வி 21 ஆ)


ஊக்கமது ...........

ஊண்மிக ...........

a)

விரும்பு

b)

இகழ்ச்சி

c)

கைவிடேல்

d)

பேசேல்

13.

கேள்வி 21 அ)

வாக்கியங்களை வகைப்படுத்துக.


  1. கனத்த மழையால் பினாங்கில் வெள்ளம் ஏறியது.
  2. நம் நாட்டின் முதல் பிரதமர் யார்?
  3. ஐயோ! கால் வலிக்கிறதே!
a)

கட்டளை வாக்கியம், வேண்டுகோள் வாக்கியம், செய்தி வாக்கியம்

b)

செய்தி வாக்கியம், வினா வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

c)

செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

14.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பரிசளிப்பு விழாவின் போது மாணவர்களின் ............. நிகழ்ச்சி பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது.

a)

நன்மை தீமை

b)

ஆடல் பாடல்

15.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பில் கேட்ஸ் ........... உழைத்ததால் இன்று உலகின் முதல் நிலை பணக்காரராகத் திகழ்கிறார்.

a)

நன்மை தீமை

b)

அல்லும் பகலும்

c)

எலும்பும் தோலுமாய்க்

16.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


டிங்கிக் காய்ச்சல் கண்டதால் சிவாவின் உடல் ............. காணப்பட்டது.

a)

எலும்பும் தோலுமாய்க்

b)

நன்மை தீமை

c)

அல்லும் பகலும்

17.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


(.............................) ஓர் அழகிய கிராமம்.

a)

அது

b)

அஃது

18.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


ஆசிரியர் பணி (.............................) அறப்பணி.

a)

ஓர்

b)

ஒரு

19.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் காக்க வேண்டியது இளைஞர்களின் கடமை என பிரதமர் (.............) உரையில் கூறினார்.

a)

தன்

b)

தம்

20.

கேள்வி 21

ஆ)திருக்குறளை நிறைவு செய்க.


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

................................................................................................

a)

தெய்வத்துள் வைக்கப் படும்.

b)

யாண்டும் இடும்பை இல.

c)

உயிரினும் ஓம்பப் படும்.

21.

கேள்வி 21

ஆ)திருக்குறளை நிறைவு செய்க.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

................................................................................................

a)

யாண்டும் இடும்பை இல

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

உயிரினும் ஓம்பப் படும்

22.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


குமரனும் விமலனும் ஏறியில் மீண் பிடித்தனர்.

a)

ஏறியில்

b)

மீண்

c)

பிடித்தனர்

d)

குமரனும் விமலனும்

23.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


வாழைப்பழத் தோள் வழுக்கி சிறுவன் கீலே விழுந்தான்.

a)

வாழைப்பழத்

b)

தோள்

c)

வழுக்கி

d)

கீலே

24.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


அடுத்த சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதல் நிளையை வெள்ளும்.

a)

நிளையை

b)

வெள்ளும்

c)

விளையாட்டுப் போட்டியில்

d)

மலேசியா

25.

கேள்வி 21

ஆ) மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

a)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவர்.

b)

அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.

26.

கேள்வி 21

ஆ) மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

a)

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

b)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.

27.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

28.

பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

தாயும் சேயும்

29.

மதி அரசி எப்போதும் தன் வேலைகளை ..................யாக தான் செய்வாள். அதனால் தன் அம்மாவிடம் தினமும் திட்டு வாங்குவாள்.

a)

கல்வி கேள்வி

b)

தாயும் சேயும்

c)

அரை குறை

d)

நன்மை தீமை

30.

சுற்றத்தாரின் ..................................களைப் பெரிதுபடுத்தாமல் அவர்களோடு நல்லுறவு கொள்வது சாலச் சிறந்தது.

a)

அரை குறை

b)

கரடு முரடு

c)

பேரும் புகழும்

d)

குற்றம் குறை

31.

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அதுபற்றிய ..............................களை அறிந்து செயல்படுவது நல்லது.

a)

நன்மை தீமை

b)

தாயும் சேயும்

c)

அரை குறை

d)

பேரும் புகழும்

32.

வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை

a)

7

b)

8

c)

9

33.

வல்லிண எழுத்துக்கள்

a)

க,ச,ட,த,ப,ற

b)

ய,ற,ல,வ,ழ,ள

c)

ங, ன,ந, ம,ண

34.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

35.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

36.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

37.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

38.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

39.

சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தைத் தம்பி எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.

a)

கரைத்துக் குடித்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

திட்ட வட்டம்

d)

கையும் களவுமாய்

40.

1.கீழ்க்காணும் குழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.


மகாபாரதக் கதையில், வறுமையில் வாடிய தம் நண்பர் குசேலர் தம்மிடம் யாசகம் கேட்கும் முன்பே அளவிட இயலாத அளவுக்குச் செல்வத்தை வாரி வழங்கினார் கண்ணபிரான்.

a)

A எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்

b)

B செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

c)

C வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

d)

D.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

41.

2. கீழ்க்காண்பனவற்றுள் இணைமொழி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A அன்றும் இன்றும் படித்த மாறன் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான்

b)

B கதிரவன் சாலையைக் கடப்பதற்குமுன் அங்கும் இங்கும் பார்த்தான்

c)

C வளர்மதி எழுதிய கட்டுரையின் குறை நிறைகளை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்

42.

3.கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரந்த எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க

a)

A.ஐஸ்வர்யம்,

பக்க்ஷி,

விஷம்,கர்ஜனை

b)

B.புஷ்பம், ரோஜா,ஷண்பகம்,சாமந்தி

c)

C.ஜனவரி,ஜூலை,ஆகஸ்டு,நவம்பர்

d)

D.கிருஷ்ணன், மஹாதேவன், சிவன்,சரஸ்வதி

43.

கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க


ஈ , ஊ ,ஐ,ஒள


a)

A உயிர் நெடில் எழுத்துகள்

b)

B உயிர்க் குறில் எழுத்துகள்

c)

C வல்லின மெய் எழுத்துகள்

d)

D மெல்லின மெய் எழுத்துகள்

44.

5.சரியான விடையைத் தெரிவு செய்க

a)

A மண் + குடம் = மண்குடம்

b)

B கல் + பாறை = கட்பாறை

c)

C முள் + செடி = முட்செடி

d)

D பொன் + பானை = பொன்பானை

45.

6.உயர்திணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க

a)

A ஆண்பால், பெண்பால், பலவின்பால்

b)

B ஆண்பால், பெண்பால், பலர்பால்

c)

C பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்

d)

D ஒன்றன்பால், பலர்பால், பலவின்பல்

46.

7.கீழ்க்காணும் வாக்கியத்தில் காலியிடத்திற்கு ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க


பள்ளிகளுக்கிடையிலான காற்பந்துப் போட்டியில் பார்த்திபன் மிகச் சிறப்பாக விளையாடினான். ……………………….. , மாவட்டப் போட்டிக்கு அவன் தேர்வாகவில்லை.

a)

A எனவே

b)

B ஆகவே

c)

C மேலும்

d)

D இருப்பினும்

47.

8.வேற்றுமை உருபைச் சரியாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A. 2ஆம் வேற்றுமை உருபு - மாலா பள்ளிக்குச் சென்றாள்,

b)

B. 4ஆம் வேற்றுமை உருபு - நாய் தண்ணீரைத் தேடி அலைந்தது.

c)

C. 2ஆம் வேற்றுமை உருபு - யானைக்குப் பெரிய தந்தம் உண்டு.

d)

D. 4ஆம் வேற்றுமை உருபு - அவனுக்குக் கடுமையான வயிற்றுவலி.

48.

9.கீழ்க்காண்பனவற்றுள் வினையடை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A இளமாறன், இனிமையான பாடலைப் பாடினார்.

b)

B இளமாறன், பாடலை இனிமையாகப் பாடினார்.

c)

C இளமாறன், பாடிய பாடல் இனிமையானது.

d)

D இளமாறன், இனிய பாடலைப் பாடினார்.

49.

10.கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க


அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.

a)

A. மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.

b)

B நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.

c)

C அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.

d)

D. நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை

50.

11.கீழ்காணும் கருத்துக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க


துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்

a)

A. ஏறு போல் நட

b)

B. ஆண்மை தவறேல்

c)

C. இளைத்தல் இகழ்ச்சி

d)

D. உடலினை உறுதிசெய்

51.

12.கீழ்க்காணும் சொற்றொடருக்கு எதிர்மறையான கருத்தைக் கொண்டுள்ள மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


எண்ணித் துணிக கருமம்

a)

A கரைத்துக் குடித்தல்

b)

B கண்ணும் கருத்தும்

c)

C அவசரக் குடுக்கை

d)

D முழு மூச்சு

52.

13.பொருத்தமான மரபுத்தொடரை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A படிப்பிலும் விளையாட்டிலும் பல பரிசுகளைப் பெறும் மகனைப் பார்த்துப் பரிமளா உச்சிக் குளிர்ந்தாள்.

b)

B பூப்பந்தாட்டப் போட்டியில் தான் வெற்றிப் பெறப் போவதாக மாறன் கடுக்காய் கொடுத்தான்.

c)

C குமரன் ஆழம் பார்த்துப் பணத்தைச் சேமித்துத் தான் விரும்பிய மிதிவண்டியை வாங்கினான்.

d)

D முகிலரசி ஒரு செயலைக் கிள்ளுக் கீரையெனத் தொடங்கிவிட்டு அதனை முடிக்க முடியாமல் திண்டாடுவாள்.

53.

14.நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும் என்னும் பழமொழிக்கு ஈடான உவமைத்தொடரைத் தெரிவு செய்க

a)

A மலரும் மணமும் போல

b)

B இலைமறை காய் போல

c)

C குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

D சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

54.

15.கோடிடப்பட்ட செய்யுள் வரியின் பொருளைத் தெரிவு செய்க


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

A இல்லாவிடினும் அவர் குறையை வெளியில் சொல்லக் கூடாது.

b)

B.நல்லவராக இல்லாவிடினும் அடக்கமானவராக நாம் இருக்க வேண்டும்.

c)

C .நல்லவராக இல்லாவிடினும் நாம் அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும்.

d)

D.நல்லவராக இல்லாவிடினும் நாம் அடங்கிப் போகுபவராக இருக்கக் கூடாது.