Worksheetsபெயர், வினை, இடை, உரி
Total questions: 20
Worksheet time: 20mins
பின்வருவனவற்றுள் பெயர்ச்சொல் எது?
முருகன்
வந்தான்
மற்று
சால
வினைச்சொல்லை மேலும் சிறப்பிக்க வருவது எது?
பெயர்ச்சொல்
இடைச்சொல்
பெயர் உரிச்சொல்
வினை உரிச்சொல்
”குமரன் கோவில் மணியை அடித்தான்” என்பதில் செயற்படுபொருள் எது?
குமரன்
கோவில்
மணி
அடித்தான்
பின்வருவனவற்றுள் வினைச்சொல் எது?
போல
இருந்தான்
மரம்
மாணவன்
பின்வருவனவற்றுள் பொருட்பெயர் எது?
இதழ்
மார்கழி
கருமை
மரம்
பின்வருவனவற்றுள் குறிப்பு வினைச்சொல் எது?
சென்றான்
பொன்னன்
இருப்பான்
வருகிறான்
வேற்றுமை உருபுகளை எவ்வகைச் சொல் என்பர்?
பெயர்
வினை
இடை
உரி
“உரிச்சொற்கள் தனித்து இயங்கும்” என்பது சரியா, பிழையா?
சரி
பிழை
பின்வருவனவற்றுள் காலப்பெயர் எது?
நண்பகல்
நண்பன்
நண்டு
நன்மை
“அமுது சாலச் சிறந்தது” என்பதில் உள்ள வினைச்சொல் எது?
அமுது
சால
சிறந்தது
”வேலன் வேலை எறிந்தான்” என்பதில் உள்ள இடைச்சொல் ஒன்று?
வேலன்
வேல்
ஐ
எறிந்தான்
”ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு” என்பதில் உரிச்சொல் எது?
கொக்கு
மீன்
உறு
ஓட
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைச்சொல் எது?
நடக்கிறான்
ஓடுவான்
படித்தான்
ஆடுவாள்
பின்வருவனவற்றுள் இடைச்சொல் எது?
அத்து
காற்று
வென்றான்
இரவு
பின்வருவனவற்றுள் சினைப் பெயர்ச்சொல் எது?
குழந்தை
விரல்
பொன்
குமரன்
பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு
நான்கு
ஆறு
பத்து
ஓடினான் என்பது எந்த வகைச் சொல்?
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
பின்வருவனவற்றுள் உரிச்சொல் எது?
மாறன்
வள்ளி
வந்தான்
நனி
பின்வருவனவற்றுள் குணப்பெயர் எது?
மரம்
காலை
வெண்மை
கற்றல்
பின்வருவனவற்றுள் இடைச்சொல் எது?
கந்தன்
வந்தான்
சால
ஆனால்
