WorksheetsMTL intensive_அமைப்புச் சொற்கள்
Total questions: 25
Worksheet time: 19mins
அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கிய உணவுமுறையைக் கடைப்பிடித்தல், சோம்பலை __________ சுறுசுறுப்புடன் இயங்குதல் முதலியவை புத்தாண்டுத் தீர்மானங்களுள் குறிப்பிடத்தக்கவை.
விடுவித்து
நீக்கி
பழக்கவழக்கங்களை மேம்படுத்திக்கொள்வது அல்லது நற்செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றோடு தொடர்புடையனவாகவே பெரும்பாலும் ஒருவரது புத்தாண்டுத் தீர்மானங்கள் __________
அமைகின்றன
திகழ்கின்றன
1970களிலிருந்து நம் நாட்டில் பல்வேறு இயக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மக்களிடையே நல்ல பழக்கவழக்கங்கள் __________ காரணமாக இருந்ததுடன் சமூக ஒற்றுமையையும் கட்டிக்காத்தன.
உருவாக
ஏற்படுத்த
1982-ஆம் ஆண்டுத் தேசிய பணிவன்பு இயக்கத்தையொட்டி நம் அரசாங்கம் சிங்கத்தைப் பணிவன்பின் சின்னமாக __________ அதற்குச் 'சிங்கா' என்று பெயரிட்டது.
தேர்ந்தெடுத்து
உருவெடுத்து
சிங்கப்பூரர்கள் தம் திறன்களை வளர்த்துக்கொள்வதோடு காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய __________ பெற்றிருக்க வேண்டும்.
தன்மையையும்
எண்ணத்தையும்
தம் வேலையை இழந்து புதிய வாய்ப்புகள் இன்றி வருந்தும் நிலை மக்களுக்களுக்கு ஏற்படுவதை __________ அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
நிறுத்துவதற்கு
தடுப்பதற்கு
தற்போது ஒன்பது சிங்கப்பூரர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது __________ தகவலாகும்.
வருத்தத்திற்குரிய
சவால்மிக்க
நீரிழிவு நோய் வந்தால் அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொண்டு உடலைப் பாதுகாக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். அத்தகைய எண்ணம் நீரிழிவு நோய்க்கு எதிரான முயற்சியில் __________ உண்டாக்கும்.
தாக்கத்தை
பின்னடைவை
தன்னம்பிக்கை ஆக்கத்திற்கு அடிப்படையாக இருக்க, கர்வமோ அழிவுக்கு __________ .
ஊக்கமளிக்கிறது
இட்டுச்செல்கிறது
அண்மைக் காலமாகக் கட்டடங்களின் மேற்கூரைகலில் பசுமையான தோட்டங்களை அமைத்து அவற்றைப் பேணும் __________ அதிகரித்து வருகிறது.
நிலை
போக்கு
நம் உடலை நோய் __________ தடுக்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே நாம் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
ஏற்படாமல்
அணுகாமல்
புகைப்படம் எடுப்பது இன்று ஒரு கலையாகப் போற்றப்படுகிறது. அதனால், புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை __________ எறியப்பட்டு விட்டது.
தகர்த்து
அழித்து
ஒரு செயலை நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் திறனைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு __________ அவசியம்.
கற்பிப்பது
வளர்ப்பது
பணத்தால் மனித உறவையோ ஒரு வேலையின் தரத்தையோ __________ இயலாது.
மதிக்க
மதிப்பிட
நகங்களை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை __________ விடலாம் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
சோதித்து
கணித்து
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தகைய அகத்தின் அழகை __________ நகங்களும் பங்கு உண்டு.
பிரதிபலிப்பதில்
தருவதில்
நாகரிக வளர்ச்சியை எட்டாத மனிதர்கள் காலணிகளை அணிந்து காடுகளில் __________ திரிந்தனர்.
அலைந்து
நடந்து
சோம்பல் என்பது சிலந்தி வலைப்போல் மெதுவாக நம்மீது படரத் தொடங்கும். அதை அப்படியே __________ அதுவே ஓர் இரும்புச் சங்கிலியாக நம்மைப் பிணைத்துவிடும்.
விட்டுவிட்டால்
பின்பற்றினால்
ஒரு பிரச்சினையைச் சாமாளிக்கலாம் என்ற __________ நம்மிடம் இருந்தால் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
எண்ணம்
நம்பிக்கை
உலகச் சுகாதார அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ஆம் நாளை அனைத்துலக கை கழுவும் நாளாக __________ .
வலியுறுத்தியுள்ளது
அறிவித்துள்ளது
உலகமயமாதலினால் உலக வெப்பநிலை அதிகரித்துள்ளது. ______ பல நாடுகளில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதனால்
ஆகவே
தொற்றுநோய்ப்பரவலின்போது பலருக்கும் வேலை வாய்ப்புப் பறிபோனது. _________ சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வரவில்லை.
ஆனால்
எனவே
இணைப்பாட நடவடிக்கை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ____________ அது அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஏனெனில்
ஆகவே
சில மாணவர்கள் தங்களின் நண்பர்களின் பழக்கவழக்கத்தால் தீய வழிகளில் செல்கின்றனர். ______ பிள்ளைகள் தங்களின் விருப்பம்போல் நட்பு கொள்வதற்குப் பெற்றோர்கள் தடைவிதிக்கின்றனர்.
ஆகையால்
ஆனால்
மழைக்காலத்தில் தவளைகள் மகிழ்ச்சியாக ஒலி எழுப்புகின்றன. ______ பாம்புகளுக்குத் தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கின்றது.
அதுவே
அவையே
