Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புதுமணத் தம்பதியர் ஒருமித்த கருத்தோடு ____________________ வாழ வேண்டுமெனத் திருமணத்திற்கு வந்திருந்த பெரியோர்கள் வாழ்த்தினர். 

a)

இலைமறை காய் போல

b)

தாயைக் கண்ட சேயைப் போல

c)

மலரும் மணமும் போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

2.

இவ்வுவமைத்தொடருக்கு மிகப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

a)

மனதில் ஆழமாகப் பதிதல்.

b)

இணைந்தே இருப்பது

c)

இன்பத்துக்குமேல் இன்பம்

d)

கூற முடியாத நிலையில் இருத்தல்

3.

உதவித் தொகை பெறலாம் என்ற புலனத் தகவலை நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாந்து போனதை யாருக்கும் சொல்ல முடியாமல் தவித்தாள்   தேன்மதி.

a)

       மலரும் மணமும் போல  

b)

ஊமை கண்ட கனாப் போல 

c)

இலவு காத்த கிளி போல

d)

 

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

4.

1.   ஆசிரியர் போதித்த பாடங்கள் அனைத்தும் ___________________________

   மனத்தில்  பதிந்துவிட்டன

a)

மலரும் மணமும் போல

b)

பசுமரத்தாணி போல

c)

காந்தம் இரும்பைக் கவர்வது போல

d)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

5.

படத்திற்கு பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

பூவும் மணமும் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

பசுமரத்தாணி போல

d)

காந்தம் இரும்பைக் கவர்வது போல

6.

படம் உணர்த்தும் உவமைத்தொடர் தெரிவு செய்க

a)

வேலியே பயிரை மேய்ந்தது போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

தாயைக் கண்ட சேயைப் போல

d)

குடத்திலிட்ட விளக்கு போல

7.

பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

எதிர்பார்த்து நீண்ட காலம் காத்திருந்து, அது நடவாமல் போவதால் ஏற்படும் ஏமாற்ற நிலையை

a)

மணியும் ஒலியும் போல

b)

இலைமறை காய் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

8.

பல தன்முனைப்புப் பயிற்சிகளுக்குப் பிறகு, தன்னை தைரியப்படுத்துக் கொண்டு விமலன் நடனம் ஆடும் போட்டியில் பங்குப்பெற்று___________________ இருந்த, அவனுடைய நடனம் ஆடும் திறனை வெளிக்கொணர்ந்தான்.

a)

இலைமறை காய் போல்

b)

பசுமரத்தாணி போல

c)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

d)

மணியும் ஒலியும் போல

9.

எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று மகிழ்ச்சியில் இருந்த கணிமொழிக்கு அவள் அம்மா தொடுத்த பரிசு ____________ இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

இலைமறை காய் போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

10.

உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண்  போல

a)

மிகவும் வாசனையாக இருத்தல்

b)

தன் செயலில் கவனமாக இருத்தல்

c)

காத்திருந்து வெற்றியடைதல்

d)

தெளிவாகத் தெரியாமை