NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 14
Worksheet time: 7mins
திருக்குறளை இயற்றியவர் யார் ?
பாரதியார்
வள்ளுவர்
அப்துல் கலாம்
அஜித் குமார்
தொட்டனைத் தூறும் மணற்கேணி குறளின் பொருள் என்ன ?
எந்த அளவுக்குத் நீர் ஊற்றுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.
எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளராது.
எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு மணல் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.
எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.
நாம் கல்வி கற்கும் போது, நமக்கு என்ன வளரும் ?
மூளை
படிப்பு
அறிவு
வாய்
காலியான இடத்தை நிறைவு செய்க.
தொட்டணைத் தூறும் மணற்கேணி ___________________
கற்றனைத் தூறும் அறிவு.
மாந்தர்க்குக்
மனிதருக்குக்
மானிடருக்குக்
கற்பவர்களுக்குக்
தொட்டனைத் தூறும் எனும் குறள் எதனைப் பற்றி எடுத்துரைக்கிறது ?
செல்வம்
விருந்தோம்பல்
கல்வி
சுகாதாரம்
நாம் ஒருவருக்குச் செய்யும் உதவியானது எதை விட பெரியது ?
இவ்வுலகம்
இவ்பிரபஞ்சம்
இந்நாடு
இப்பிறவி
காலத்தி னாற்செய்த நன்றி எனும் குறளின் பொருள் யாது ?
ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரியதாகக் கருதப்படாது.
ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.
ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் சிறியதாகக் கருதப்படும்.
திருக்குறளை நிறைவு செய்க.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
___________________ மாணப் பெரிது.
பாலத்தின்
ஞாமத்தின்
வாமத்தின்
ஞாலத்தின்
காலத்தினாற் எனும் குறளுக்குத் தொடர்புடைய குறள் எது ?
திருக்குறளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
1
2
3
4
திருக்குறள் மொத்தம் எத்தனை ?
1111
1330
1234
3213
திருக்குறளில் மொத்தம் எத்தனை அடி கொண்டது ?
1
2
3
4
திருக்குறளின் முதல் பெயர் என்ன ?
முந்நூறு
முக்கனி
முப்பால்
முத்தமிழ்
திருக்குறள் இதுவரை ______ மொழிகளில் வெளிவந்துள்ளது.
6
16
26
36
