NEW
Font size
WorksheetsP5 ஒலி வேறுபாடு பாடத்திருப்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
என் சித்தப்பாவின் திருமணம் ___________ மாதத்தில் நடைபெறும்.
ஆனி
ஆணி
சுசிலாவின் தலையில் ____________ இருந்ததால், மாணவர்கள் அவள் அருகில் செல்ல தயங்கினார்கள்.
பேண்
பேன்
பௌர்ணமி அன்று, நாம் முழு நிலாவின் _____________ காணலாம்.
அலகை
அழகை
கனிமொழிக்கு ______________ மனம் இருந்ததால் அவள் பலருக்கு உதவி வருகிறாள்.
பரந்த
பறந்த
வானம் ___________ வருவதைக் கண்ட அம்மா, காய வைத்திருந்த துணிகளை வீட்டுக்குள் எடுத்து வந்தார்.
கறுத்து
கருத்து
கிளி சோதிடர் என் எதிர்காலத்தைக் _________________ கூறினார்.
கணித்து
கனித்து
காட்டில் காணாமல் போன அன்பன் இருட்டில் __________ தெரியாமல் தவித்தான்.
வலி
வழி
சங்கர் _____________ விளையாடுவதில் திறமைசாலி. அவன் பலருடன் விளையாடி வென்றான்.
கோழி
கோலி
நள்ளிரவு ஆனதும், திருடன் செல்வந்தரின் மாளிகைக்குள் புகுந்து _____________ அடித்தான்.
கொல்லை
கொள்ளை
வேலை செய்யும் ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகனும் ____________ செலுத்த வேண்டியது அவசியம்.
திறை
திரை
