Font size
Worksheetsஇடைச்சொல் ஆண்டு 5 (கடினம்) உம், அல்லது
Total questions: 10
Worksheet time: 8mins
வாக்கியத்தில் சரியான இடைச்சொல் ஏற்ற விடையைத் தேர்ந்தெடுக.
உனக்கு ஓர் (அண்ணன்-)_________ஓர் (அக்காள்-)______உள்ளனர் என்பது உண்மையா?
உம், உம்
அல்லது, உம்
உம், அல்லது
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(முறையான உடற்பயிற்சி நோயை ஓட்டிவிடும் .)
(சரிவிகித உணவு நோயை ஓட்டிவிடும்.)
ஆகையால்
எனவே
உம்
அல்லது
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(மூங்கிலால் கூடை பின்னப்படுகிறது.)
(பிரம்பால் கூடை பின்னப்படுகிறது. )
(பனையோலையால் கூடை பின்னப்படுகிறது.)
ஆகவே
அல்லது
இருப்பினும்
உம்
ஏனெனில்
இவ்வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல் யாது?
வெற்றியும் தோல்வியும் மனிதனின் வாழ்வில் ஏற்படுவது வழக்கம்.
அல்லது
உம்
ஆகவே
ஆனால்
இப்பாடல் வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல் யாது?
"பாலும் பழமும் கைகளில் ஏந்தி.....".
அல்லது
உம்
மேலும்
ஆகையால்
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(குபேரன் வரலாறு பாடத்தை மீள்பார்வைச் செய்தான்.)
(கபிலன் வரலாறு பாடத்தை மீள்பார்வைச் செய்தான்.)
அல்லது
உம்
ஆனால்
கீழ்க்காணும் பத்தியில் 'அல்லது' மற்றும் 'உம் ' இடைச்சொற்கள் எத்தனை அமைந்துள்ளது எனக் குறிப்பிடுக.
பள்ளியின் பரிசளிப்பு விழாவிற்கு அம்மா அல்லது அப்பா இருவரில் யாரவது ஒருவர் கண்டிப்பாக வரவேண்டும் என ஆசிரியர் கூறியிருந்தார். ஆனால், பரிசளிப்பு விழாவிற்கு இருவருமே வந்திருந்தனர். நானும் என் தங்கையும் வகுப்பில் முதல் நிலை வந்ததால் பரிசு பெற்றோம்.
அல்லது 2,உம் 2
அல்லது 1,உம் 3
அல்லது 2, உம் 3
அல்லது 1, உம் 2
கீழ்க்காணும் வக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(நீங்கள் இந்நிகழ்ச்சிக்குப் பண்பாட்டு உடை அணிந்து வரலாம்.)
(நீங்கள் இந்நிகழ்ச்சிக்கு மேல் நாட்டு உடை அணிந்து வரலாம்.)
மற்றும்
-உம்
அல்லது
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(எனக்கு அம்மா சமைத்த உணவு என்றால் பிடிக்கும்.)
(எனக்குச் சித்தி சமைத்த உணவு என்றால் பிடிக்கும்.)
அல்லது
உம்
மேலும்
வாக்கியத்தில் சரியான இடைச்சொல் ஏற்ற விடையைத் தேர்ந்தெடுக.
ஈருலக சுவாச உறுப்புக் கொண்ட தவளை (நீர்)____ (நிலம்)_____ வாழும் உயிரினம் ஆகும்.
நீராலும்,
நிலத்திலும்
நீரிலும், நிலத்திலும்,
நீரால், நிலத்துடனும்,
