NEW
Font size
Worksheetsஆனந்த்-செய்யுள்-நீதி வெண்பா
Total questions: 15
Worksheet time: 8mins
அருந்துணை என்பதைப் பிரித்தால் …………………
அ) அருமை + துணை
ஆ) அரு + துணை
இ) அருமை + இணை
ஈ) அரு + இணை
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ்
ஆ) அறிவியல்
இ) கல்வி
ஈ) இலக்கியம்
‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
‘கற்றவர் வழி அரசு செல்லும்’ என்று கூறும் இலக்கியம்…………………
அ) காப்பிய இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சங்க இலக்கியம்
ஈ) நீதி இலக்கியம்
‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…………………
அ) சதாவதானி
ஆ) தசாவதானி
இ) மொழி ஞாயிறு
ஈ) கவிமணி
‘ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ என்று கூறியவர் யார்?
அ) ஒளவையார்
ஆ) கபிலர்
இ) திருவள்ளுவர்
ஈ) செய்குதம்பிப் பாவலர்
செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை…………………
அ) ஓவியம்
ஆ) சதாவதானம்
இ) நாட்டியம்
ஈ) சிற்பம்
செய்குதம்பிப் பாவலரின் மாவட்டம் ………………… வட்டம்…………………
அ) கன்னியாகுமரி, இடலாக்குடி
ஆ) தஞ்சாவூர், படைத்தலைவன்குடி
இ) கடலூர், மஞ்சக்குப்பம்
ஈ) சென்னை , மயிலாப்பூர்
செய்குதம்பிப் பாவலர் …………………வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.
அ) பத்து
ஆ) பதினைந்து
இ) பதினெட்டு
ஈ) இருபது
சதாவதானி என்ற பாராட்டப் பெற்றவர்…………………
அ) உமறுப்புலவர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) செய்குதம்பிப் பாவலர்
ஈ) படிக்காத புலவர்
சதாவதானி என்பது…………………
அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
ஆ) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
இ) நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
ஈ) ஆயிரம் பேருக்கு உணவிடுவது
செய்குதம்பிப்பாவலர் சதாவதானி என்று பாராட்டுப் பெற்ற இடம்…………………நாள்…………………
அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10
ஆ) சென்னை தீவுத் திடல், 1909 மார்ச் 8
இ) தஞ்சாவூர் திலகர் திடல், 1908 பிப்ரவரி 8
ஈ) திருச்சி அண்ணா மைதானம், 1906 மார்ச் 6
செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்…………………
அ) கன்னியாகுமரி
ஆ) இடலாக்குடி
இ) சென்னை
ஈ) மயிலாப்பூர்
‘சதம்’ என்றால் ………………… என்று பொருள்.
அ) பத்து
ஆ) நூறு
இ) ஆயிரம்
ஈ) இலட்சம்
தோண்டும் அளவு நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறுவது…………………
அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) ஏலாதி
ஈ) திரிகடுகம்
