NEW
Font size
Worksheetsஒலிவேறுபாடு!
Total questions: 10
Worksheet time: 5mins
சுமதி __________ உண்பதைத் தவிர்த்துவிட்டாள். அவள் எப்போதும் காய்கறி உணவு வகைகளையே விரும்பி உண்பாள்.
ஊன்
ஊண்
ஆடு, எருது போன்ற கால்நடை விலங்குகள், பசும் புல் மற்றும் இலை __________
ஆகியவற்றை விரும்பி உண்கின்றன.
தலை
தழை
கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும். அதனால், __________________ உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
பொரித்த
பொறித்த
சில நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் ஏற்பட்ட
___________ மக்கள் பலர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.
வெல்லத்தால்
வெள்ளத்தால்
நெருப்புக்கோழி _____________ இனத்தைச் சேர்ந்தது. அது அதன் நீண்ட
கால்களைப் பயன்படுத்தி வேகமாக ஓடும் ஆற்றல் உடையது.
பரவை
பறவை
அழகிய தோட்டம் ஒன்றின் நடுவில் ஏரி இருந்தது. அதில் _______________________ நீந்தி வரும் அழகினைக் காணவே இரு விழிகள் போதவில்லை!
அன்னம்
அண்ணம்
மற்றவர்களைப் பற்றி _______________ சொல்வது கெட்டப் பழக்கம். இதுபோன்ற கெட்டப் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
கோல்
கோள்
திருடன் காவலர்களிடம் கையும் களவுமாக சிக்கினான். அவனைக் கைது செய்த மறுகணமே காவலர்கள் அவனுடைய கைகளில் _______________ மாட்டி காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்கள்.
விலங்கு
விளங்கு
மரத்திலிருந்து விழுந்த ____________ மாறனின் தலையில் 'தொப்' என்று விழுந்தது.
கனி
கணி
பரதன் அடுக்குமாடி கட்டத்தின் கீழ்த்தளத்திலிருந்து கத்தியபோது அவனுடைய குரலின் ___________ கேட்டது.
எதிரொலி
எதிரொளி
