NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு_3
Total questions: 20
Worksheet time: 7mins
பேரங்காடியில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அங்கே பெரும்பாலான பொருள்கள் விலை ____________ விற்கப்படுகின்றன.
குறைத்து
குரைத்து
அன்று ராமுவின் பிறந்தநாள். அதனால், அவனுடைய தாயார் அவனுக்கு விருப்பமான இறால் ____________ வைத்தார்.
குளம்பு
குழம்பு
சுந்தரம் ____________ வலியால் அவதிப்படுகிறார். அவரால் கனமான பொருள்களைத் தூக்க முடியாது.
தோல்
தோள்
என் தாயார் மல்லிகை மலர்களை மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தார். அதன் ____________ வீடெங்கும் பரவியது.
மணம்
மனம்
இசை நிகழ்ச்சி தொடங்க இன்னும் ____________ மணி நேரம் இருந்தது. நாங்கள் முன்னதாகவே இசை அரங்குக்கு வந்துவிட்டோம்.
அரை
அறை
அன்பன் கல் தடுக்கிக் கீழே விழுந்தான். நல்ல ____________! அவனுக்குப் பலமான காயம் ஏதும் ஏற்படவில்லை.
வேளை
வேலை
ரதி பொது விடுமுறையை மகிழ்ச்சியுடன் ____________ விரும்பினாள். எனவே, ரதியின் பெற்றோர் அவளைச் செந்தோசாத் தீவுக்கு அழைத்துச் சென்றனர்
கழிக்க
களிக்க
மாலா மற்றவர்களுக்கு உதவும் ____________ உடையவள். அதனால், அவளுக்கு நெருங்கிய தோழிகள் பலர் உள்ளனர்.
மணம்
மனம்
என் தம்பி மாம்பழம் சாப்பிட விரும்பினான். அவன் என் தாயாரிடம் அதை ____________ தரச் சொன்னான்.
அறிந்து
அரிந்து
டிசம்பர் மாதத்தில் எங்களுடைய உறவினரைப் பார்க்க நாங்கள் இங்கிலாந்து சென்றிருந்தோம். அங்கே வீடுகளின் கூரைகளில் ____________ பொழிந்துள்ள காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.
பணி
பனி
மல்லிகைப் பூவின் ____________ சிலருக்குத் தலைவலியை உண்டாக்கும். அதனால், அவர்கள் அதை வாங்கமாட்டார்கள்.
மணம்
மனம்
சுமதி திடலில் விளையாடியபோது அவளுடைய வெள்ளைச் சட்டையில் ____________ படிந்துவிட்டது. துவைக்கும்போது அதைப் போக்குமாறு அவள் தன் அம்மாவிடம் கூறினாள்.
கரை
கறை
மாமா, சுவரில் மாட்டுவதற்கு ஓர் அழகான படத்தை வாங்கி வந்தார். ஆனால், அவர் அதன் ____________ எவ்வளவு என்று எங்களிடம் கூற மறுத்துவிட்டார்.
விலை
விளை
மாணவர்கள் ____________ அருகே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது ஆபத்தானது என்று ஆசிரியர் அறிவுரை கூறி அவர்களை அங்கிருந்து போகச் சொன்னார்.
ஏறி
ஏரி
எனக்கு அஞ்சலில் வாழ்த்து அட்டை ஒன்று வந்தது. நான் உடனே ____________ கிழித்து வாழ்த்து அட்டையைப் படித்து மகிழ்ந்தேன்.
உரையை
உறையை
சிறைக்காவலர் விடுதலையாகும் கைதிகளைச் சந்தித்தார். அவர் கைதிகளிடம் தீய பழக்கங்களை ____________ நற்பழக்கங்களைக் கடைப்பிடிக்கும்படி கூறினார்.
விளக்கி
விலக்கி
புனிதன் தன் பிறந்தநாளைக் கொண்டாடினான். அப்போது அவனுடைய நெருங்கிய தோழர்கள் அவன் பெயர் ____________ பேனாவைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
பொறிக்கப்ட்ட
பொரிக்கப்ட்ட
ரவி ____________ சொல்லும் குணம் படைத்தவன். அதனால், அவன் வகுப்பு மாணவர்கள் ரவியை நண்பர்களாகச் சேர்த்துக்கொள்ளவில்லை.
கோள்
கோல்
இளநீர் தாகத்தை ____________ உற்சாகம் அளிக்கும். அதனால், வெயில் காலங்களில் மக்கள் அதை அதிகம் வாங்கிப் பருகுகிறார்கள்.
தணித்து
தனித்து
நேற்று எங்கள் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் ____________ பள்ளி முதல்வர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னால்
முன்னாள்
