wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு 1 P5

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேவி பூந்தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே இருந்த

மல்லிகை மலர்கள் ______________ வீசின.

a)

மணம்

b)

மனம்

2.

அமீர் தன் புதிய வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றான். ______________ தவறிச் சென்றதால் அவன் தாமதமாகப் பள்ளியை அடைந்தான்.

a)

வழி

b)

வலி

3.

கபிலன் தன் நண்பனுக்குக் கடிதம் எழுதினான். எழுதிய கடிதத்தை ஓர் ____________ போட்டான்.

a)

உரையில்

b)

உறையில்

4.

வாகனம் திடீரென்று சாலையில் நின்றது.

நான் அதைப் பழுது பார்த்ததால் கையில் ________________ பட்டது.

a)

கரை

b)

கறை

5.

இளைஞர்கள் நீண்ட நேரம் காற்பந்து விளையாடினார்கள். பிறகு தாகத்தைத் தணிக்க _____________ அருந்தினார்கள்.

a)

பானம்

b)

பாணம்

6.

மீனாவின் தாயார் அவளை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தார். மீனா அவருடைய சிரமத்தை _________ விரும்பினாள்.

a)

குறைக்க

b)

குரைக்க

7.

கலாவின் அப்பா மிகவும் கோபக்காரர். அவருடைய _________ அறிந்து நடந்துகொள்வதில் கலா கெட்டிக்காரி.

a)

மனம்

b)

மணம்

8.

சேகர் காலில் செருப்பு அணியாமல் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தான். அவனுடைய காலில் கூர்மையான

________ ஒன்று குத்திவிட்டது.

a)

கள்

b)

கல்

9.

சென்ற வருடம் ஜூன் மாத விடுமுறையில் அதிக மழை பெய்தது. அப்போது ஆர்ச்சட் சாலையில் ________________ ஏற்பட்டதால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

10.

மேடையில் அறிஞர் ஒருவர் _________ ஆற்றினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவரது அறிவாற்றலை எண்ணி வியந்தனர்.

a)

உரை

b)

உறை

11.

அரசன் மரத்தடியில் உறங்கிக்கொண்டிருந்தான். அங்கு வந்த குரங்கு அவனுடைய _______________ எடுத்துக்கொண்டு ஓடியது.

a)

வாலை

b)

வாளை

12.

குகன் தன் நண்பர்களுடன் காற்பந்து விளையாடியபோது, கால் இடறிக் கீழே விழுந்தான். அப்போது அவனுடைய __________________ காயம் ஏற்பட்டது.

a)

தோலில்

b)

தோளில்

13.

குளத்தில் அழகான __________________ நீந்திக்கொண்டிருந்தது. மாணவர்கள் அதைப் பார்த்து ரசித்தனர்.

a)

அன்னம்

b)

அண்ணம்

14.

பல நாள்கள் காட்டில் அலைந்தும் மிருகங்களுக்கு _______________ கிடைக்கவில்லை.

a)

இரை

b)

இறை

15.

பிரதமர் தனது தேசிய தின ____________ பல

முக்கியக் கருத்துகளைக் கூறினார். கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் வலியுறுத்தினார்.

a)

உறையில்

b)

உரையில்

16.

மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குச் சென்றனர். அவர்கள் ____________ வீசி மீன் பிடித்தனர்..

a)

வளை

b)

வலை

17.

லதா _____________ ஆண்டுத் தேர்வில் சிறப்பாகச் செய்யவில்லை. அதனால், இறுதியாண்டுத் தேர்வுக்காக இப்போதே படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

a)

அரை

b)

அறை

18.

கட்டிலுக்கு அடியில் பாம்பு ஒன்று ‏கிடந்ததைப் பார்த்த என் அம்மா பதறிப்போய் அதை _________ ஒன்றால் அடித்தார்.

a)

களி

b)

கழி

19.

என் தம்பியின் பிறந்தநாள் என்பதால் நான் அவனைக் கட்டி __________, முத்தம் கொடுத்தேன்.

a)

அணைத்து

b)

அனைத்து

20.

டிசம்பர் மாதம் மழைக்காலமாக இருப்பதால் அதிகாலையில் எங்கும் _________________ மூட்டமாக இருக்கும்.

a)

பனி

b)

பணி