Worksheetsதமிழ் விடுகதைகள்
Total questions: 20
Worksheet time: 41mins
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான்
அவன் யார் ?
உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்
அது என்ன?
தாடிக்காரன், மீசைக்காரன் கோயிலுக்கு போனால் வெள்ளைக்காரன்
அவன் யார் ?
என் குதிரை கருப்பு குதிரை குளிப்பாட்டினால் வெள்ளை குதிரை
அது என்ன ?
மண்ணை சாப்பிட்டு , மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண்ணாவான்
அவன் யார் ?
உயரத்திலிருந்து விழுவான், அடியே படைத்து, தரைக்கு தான் சேதாரமாகும்
அவன் யார் ?
பச்சை கீரை சமைக்க உதவாது, வழுக்க உதவும்
அது என்ன ?
அடர்ந்த காட்டில், ஒற்றையடி பாதை
அது என்ன ?
முதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லை தொட்டால் பாட்டு படுவான்
அவன் யார் ?
ராஜா உண்டு , ராணி உண்டு, மந்திரி உண்டு , ஆனால் நாடு இல்லை
அது என்ன ?
மேலே மேலே செல்லும் ஆனால் கிழே வராது
அது என்ன ?
மென்மையான உடம்புக்காரன் பாரம் சுமக்கும் கெட்டிக்காரன்
அவன் யார் ?
அனலில் பிறப்பான் , ஆகாயத்தில் பறப்பான்
அவன் யார் ?
வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி
அது என்ன ?
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசியும் கிளம்பாது
அவர்கள் யார் ?
காலில் தண்ணீர் குடிப்பான் , தலையில் முட்டையிடுவான்
அவன் யார் ?
சுற்றும் போது மட்டும் சுகம் தரும்
அது என்ன ?
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரை கண்டு பதைபதைப்பான்
அவன் யார் ?
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து , தெருவிலே திரியும் பூ
அது என்ன ?
நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன்
நான் யார் ?
