NEW
Font size
WorksheetsX -ஆயத்தொலை வடிவியல்(TM)
Total questions: 15
Worksheet time: 8mins
(-5,0),(0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால்
அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
0 சதுர அலகுகள்
25 சதுர அலகுகள்
5 சதுர அலகுகள்
எதுவும் இல்லை
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y - அச்சாக கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது
x = 10
y = 10
x = 0
y = 0
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடு ஆனது
X- அச்சுக்கு இணை
Y- அச்சுக்கு இணை
ஆதி புள்ளி வழிச் செல்லும்
(0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்
(5,7), (3,p) மற்றும் (6,6) என்பன ஒரு கோடு அமைந்தவை எனில், p இன் மதிப்பு
3
6
9
12
3x−y = 4 மற்றும் x+y=8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(5,3)
(2,4)
(3,5)
(4,4)
(12,3),(4,a)என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 81 எனில் ,'a' மதிப்பு
1
4
-5
2
(0,0) மற்றும் (-8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்க்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு
-1
1
31
-8
கோட்டுத்துண்டு PQ-இன் சாய்வு 31 எனில், PQ -க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு
3
−3
31
0
Y அச்சில் அமையும் புள்ளி A இன் செங்குத்து தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B இன் கிடைமட்ட தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு
8x+5y=40
8x−5y=40
x=8
y=5
7x−3y+4=0 என்ற நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதி புள்ளி வழி செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு
7x−3y+4=0
3x−7y+4=0
3x+7y=0
7x−3y=0
(i) l1: 3y=4x+5 (ii)l2: 4y=3x−1(iii)l3: 4y+3x=7 (iv)l4: 4x+3y=2 எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை
l1 மற்றும் l2 செங்குத்தானவை
l1 மற்றும் l4 இணையானவை
l2 மற்றும் l4 செங்குத்தானவை
l2மற்றும் l4 இணையானவை
8y=4x+21 என்ற நேர்கோட்டின் சமன் பாட்டிற்கு கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
சாய்வு 0.5 மற்றும்
y வெட்டுதுண்டு 2.6
சாய்வு 5 மற்றும்
y வெட்டுதுண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும்
y வெட்டுதுண்டு 1.6
சாய்வு 5 மற்றும்
y வெட்டுதுண்டு 2.6
ஒரு நாற்கரம் ஆனது, ஒரு சரிவகம் ஆக அமைய தேவையான நிபந்தனை
இருபக்கங்கள் இணை
இருபக்கங்கள் இணை
மற்றும் இருபக்கங்கள் இணையற்றவை
எதிரெதிர் பக்கங்கள் இணை
அனைத்து பக்கங்களும் சமம்
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரம் ஆனது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காணவேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள்
இரு சோடி எதிர்ப் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்து பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் சாய்வுக்கள் மற்றும் நீளங்கள்
(2,1) ஐ வெட்டுப் புள்ளியாக கொண்ட இரு நேர் கோடுகள்
x−y−3=0, 3x−y−7=0
x+y=3,3x+y=7
3x+y=3,x+y=7
x+3y−3=0, x−y−7=0
