wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உறுபு

Total questions: 20

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
நான் நேற்று ___________________ சென்றேன். 
a)
பள்ளியை
b)
பள்ளிக்கு
2.
மாறன் தன் __________________ கடைக்குச் சென்றான். 
a)
தாயாருடன்
b)
தாயாரை
3.
1.  வேடன்  ___________ கொன்றான்.
a)
புறாவுக்கு  
b)
புறாவை 
4.
1.  இன்று ___________ ஒரு புதிய மாணவன் வந்திருக்கிறான்.
a)
வகுப்பை
b)
வகுப்புக்கு
5.
சிறுவர்கள் ___________ சென்று பந்து விளையாடுகிறார்கள்.
a)
திடலுக்கு
b)
திடலை
6.
சலீமா நாளை ____________ நீச்சல் குளத்துக்குச் செல்வாள்.
a)
தந்தையை
b)
தந்தையுடன்
7.
குமார் கழிவறைக்குச் செல்ல _____________ அனுமதி கேட்டான்.
a)
ஆசிரியருக்கு
b)
ஆசிரியரிடம்
8.
நீ இப்பொழுது ____________ சந்தைக்கு வருகிறாயா?
a)
என்னோடு
b)
எனக்கு
9.
குமார் தன் _____________ ஒரு  ரப்பரை இரவல் வாங்கினான்.
a)
நண்பனுக்கு
b)
நண்பனிடமிருந்து
10.
திருமதி லதா தன் ____________ வந்த தோழிகளை அன்புடன்   வரவேற்றார்.
a)
வீட்டின்
b)
வீட்டிற்கு
11.
அந்தச் _____________ கேசவன் தான் உயரமானவன்.
a)
சிறுவர்களில்
b)
சிறுவர்களால்
12.
சிங்கக்குட்டி தன் _____________ சேர்ந்து மானை வேட்டையாடியது.
a)
தாயின்
b)
தாயுடன்
13.

பின்வருபனவற்றுள் எஃது ஏழாம் வேற்றுமையல்ல?

a)

இன்

b)

கண்

c)

இடம்

d)

கு

14.

தமிழின்பால் பற்றுக் கொள்க!!!


இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஏழாம் வேற்றுமையைத் தேர்ந்தெடுக.

a)

தமிழின்

b)

பால்

c)

பற்றுக்

d)

கொள்க

15.

முருகா! இங்கே வா.


வண்ணமிடப்பட்ட சொல் எவ்வேற்றுமையைச் சார்ந்தது?

a)

முதலாம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

எட்டாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

16.

ஏழாம் வேற்றுமைஉருவு கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

குமரன் தேர்வு எழுதினான்.

b)

அப்பா குமரனைப் பாராட்டினார்.

c)

குமரனிடம் பல நற்பண்புகள் இருக்கின்றன

d)

குமரனுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது

17.

விளித்தல் அல்லது அழைத்தல்________________________ வேற்றுமையாகும்.

a)

முதலாம்

b)

எட்டாம்

c)

மூன்றாம்

d)

ஒன்பதாம்

18.

எட்டாம் வேற்றுமை எழுவாய் வேற்றுமையாகும்.

சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

19.

வேற்றுமைஉருபு மொத்தம் _______________ ஆகும்.

a)

5

b)

8

c)

1

d)

4

20.

கீழ்கண்ட வாக்கியங்களில் எவ்வாக்கியம் எட்டாம் உருபைக் கொண்டிருக்கவில்லை?

a)

காவியன் கவிதை புனைந்தான்.

b)

தோழா! என்ன காரியம் செய்தாய்?

c)

கடவுளே! என்னைக் காப்பாற்று!

d)

முகிலா! இங்கே வா.