Worksheetsதமிழ்மொழி (இலக்கணம்)
Total questions: 20
Worksheet time: 7mins
ஓர் ஆடு இலைகளைத் தின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எத்தனை உயிர் நெட்டெழுத்துகள் உள்ளன.
2
3
0
1
திணை பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
திணை மூன்று வகைப்படும்
திணை இரண்டு வகைப்படும்
மனிதர், தேவரைக் குறிப்பது அஃறிணையாகும்.
ஆமை உயர்திணையாகும்.
பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.
திணை
பால்
எண்
இடம்
_________________ என்ற சொல்லின் முன் வருவது ஓர் உயிரெழுத்து ஆகும்.
கடல் ஆமை
இல்லம்
சாட்டை
மல்லிகை
மேற்காணும் படத்திற்கு ஏற்ற தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க.
கட்டு
குவியல்
தோப்பு
கும்பல்
கொடுக்கப்பட்ட உரையாடலில் வண்ணமிடப்பட்டுள்ள சொல் உணர்த்தும் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.
ஆசிரியர் : நேற்று கொடுத்த வீட்டுப்பாடத்தைச்
செய்து முடித்து விட்டீர்களா?
மாணவன் : ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். என்
கையில் காயம் ஏற்பட்டு விட்டதால்
என்னால் எழுத முடியவில்லை.
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
உரையாடுகிறார்கள்
மேற்கண்ட சொல்லையொட்டிய தவறான கூற்றைத் தெரிவு செய்க..
எதிர்காலம்
ஒருமை
ஒன்றன்பால்
அனைத்தும்
உயிரெழுத்தைப் பற்றி சரியான கூற்றைத் தெரிவு செய்க.
உயிரெழுத்துகள் மொத்தம் 13.
குறில் 7
பிற எழுத்துகளின் துணையின்றித் தனித்து ஒலிக்கக்கூடியவை.
நெடில் 5
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வரும் செயப்படுபொருள் எவ்வகை பாலைக் குறிக்கின்றது.
திஷன் வேகமாக ஓடி அந்தப் பந்தை உதைத்தான்.
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வருவது ______________
ஓர்
அஃது
ஒரு
இஃது
பூவரசன் அந்தப் பாழடைந்த வீட்டின் உள்ளே _________________.
நுழைந்தாள்
நுழைந்தார்
நுழைந்தான்
நுழைந்தனர்
வினா எழுத்துகள் யாவை?
எ, யா, மா, ஓ, ஏ
ஏ, யா, நீ, ஓ, ஏ
ஏ, யா, நா, ஓ, ஏ
எ, யா, ஆ, ஓ, ஏ
சரியான ஒருமை வாக்கியத்தைத் தேந்தெடு.
குயவன் பானை வனைந்தான்.
சிங்கம் ஆடுகளைத் துரத்தின.
மாணவர் திடலில் பந்து விளையாடுகின்றனர்.
மாடு புல் மேய்ந்தன.
இடப்பெயரைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
காலத்தின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது
ஒருவரின் குணத்தைக் குறிப்பது.
ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.
தன் மகன் வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட ஆரம்பித்தவுடன் கமலாவின் துன்பங்கள் யாவும் _________________________.
நீங்கின
நீங்குகிறது
நீங்கவுள்ளது
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
கதிரேஷன் அம்மா சமைத்த உணவைச் சுவைத்து உண்டான்.
செயப்படுபொருள்
பயனிலை
எழுவாய்
தொழிற்பெயர்
கீழ்காண்பனவற்றுள் எஃது உயிர் குற்றெழுத்தில் தொடங்கும் சொல் அல்ல?
ஒட்டகம்
ஐயர்
அணில்
எட்டு
உயிர் நெட்டெழுத்தைக் கொண்டிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
காடு
மாலை
ஆந்தை
அணில்
கீழ்க்காணும் வாக்கியங்களில் இடம் பெறாத பெயர்ச்சொல் எது?
- கற்பித்தல் ஆசிரியர் பணி.
- அப்துல் கலாம் தமிழ்ப் பற்றுமிக்கவர்.
- அம்மா அன்பானவர்.
பண்புப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
அருண் வாங்கிய புதிய மகிலுந்து அலகாக இருந்தது.
மேற்காணும் வாக்கியத்தில் உள்ள இலக்கணப் பிழை யாது?
ழ கரம்
ல கரம்
ர கரம்
ற கரம்
