Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5 - இணைமொழி, மரபுத்தொடர்
Total questions: 15
Worksheet time: 8mins
அமுதவாணி ஆசிரியர் போதித்த அனைத்துப் பாடங்களையும் ................ தேர்வைச் சிறப்பாக எழுதினாள்.
கரைத்துக் குடித்து
கை கூடி
காது குத்தி
தட்டிக் கழித்து
மணிவண்ணன் பிரத்தியேக வகுப்பிற்குச் செல்வதாக பெற்றோருக்குக் ................. நண்பர்களுடன் விளையாடச் சென்றான்.
காது குத்திவிட்டு
கை கொடுத்துவிட்டு
தட்டிக் கழித்துவிட்டு
கை கூடிவிட்டு
பெண் பிள்ளைகளைக் ................. எண்ணும் பலரது மத்தியில் திரு. இராமசாமி நான்கு பெண் பிள்ளைகளையும் பட்டதாரிகளாக்கினார்.
ஓட்டை வாயாக
கிள்ளுக் கீரையாக
திட்டமட்டமாக
புத்திமானாக
திரு. முத்துவிற்குத் தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என இலட்சியம். அவரது மகன் எஸ். பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று அரசாங்க உதவியுடன் மலாயா பல்கலைக்கழகத்தில் பயில வாய்ப்பு கிடைத்ததால் அவரது கனவு ............
கரைத்துக் குடித்தது
கை கூடியது
கை கொடுத்தது
தட்டிக் கழித்தது.
இரவிவர்மன் வியாபாரம் தொடங்க அழைத்த தன் நண்பனிடம் பல காரணங்களைக் கூறி .................................
தட்டிக் கழித்தான்
காது குத்தினான்
கை கொடுத்தான்
திட்டவட்டமாகக் கூறினான்
அந்த வீட்டின் முதலாளி வீட்டில் வேலை செய்யும் வயது முதிர்ந்த பெண்ணை ............................... இல்லாமல் கீழே தள்ளினான்.
திட்டவட்டம்
கிணற்றுத் தவளை
ஈவிரக்கம்
ஏட்டுச் சுரைக்காய்
முகிலன் காற்பந்து விளையாட்டில் உலகளாவிய நிலையில் .................................................
கம்பி நீட்டினான்
கை கழுவினான்
பெயர் பொறித்தான்
கை கொடுத்தான்
கொரோனா வைரஸின் காரணமாக நடவடிக்கை கட்டுப்பாடு சட்டத்தினால் அவதியுறும் பத்து குடும்பங்களுக்குத் திரு. பாலு 10கிலோ அரிசியை வழங்கி ........................................................
காது குத்தினார்
கை கொடுத்தார்
தட்டிக் கழித்தார்
கம்பி நீட்டினார்
பீஷ்மனின் வீட்டில் களவாடிய திருடர்கள் ................................. காவல் அதிகாரிகளிடம் பிடிப்பட்டனர்.
கையும் களவுமாய்
ஆணித்தரமாக
அரக்கப் பரக்க
ஆழம் பார்க்காமல்
வேலைக்கு வராத தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக திரு. ஆ சோங் ...................................... கூறினார்.
திட்டவட்டமாக
கிள்ளுக்கீரையாக
எடுப்பார் கைப்பிள்ளையாக
ஆறப் போட்டு
சோமு பள்ளியில் நடந்தவற்றை ............................................... இல்லாமல் தலைமையாசிரியரிடம் கூறினான்.
மேடு பள்ளம்
ஒளிவு மறைவு
அறை குறை
எலும்பும் தோலும்
......................................... கல்வியைக் கொண்டிருந்த மாலவன் இன்று நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறான்.
பேரும் புகழும்
ஆடிப் பாடி
அறை குறை
அன்றும் இன்றும்
திரு. துன் வி.சம்பந்தனின் .......................... மலேசிய மக்கள் அனைவரும் அறிவர்.
பேரும் புகழும்
கல்வி கேல்வி
அறை குறை
ஒளிவு மறைவு
ஏழைக் குடும்பத்தில் பிறந்த திரு. முகமது ............................ சிறந்து விளங்கினான்.
கல்விக் கேள்வியில்
வரவு செலவில்
ஆடிப் பாடுவதில்
தான தர்மத்தில்
திரு.முருகன் ............................. வேலை செய்து தன் பிள்ளைகளை உயர் கல்விக்கூடங்களில் படிக்க வைத்தார்.
அங்கும் இங்கும்
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
பேரும் புகழும்
