wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒளவையார் “_________________! உன் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்று அதியமானைப் பாராட்டினார்.

a)

மன்னன்

b)

மன்னா

c)

மன்னரை

d)

மன்னருக்கு

2.

தமிழ்மொழி _________________ போது மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள்.

a)

வாரத்தின்

b)

வாரத்தில்

c)

வாரத்தை

d)

வாரத்திற்கு

3.

கோபத்தை அடக்கத் தெரியாத ஒருவனால் _________________ சிந்தித்துச் செயல்பட முடியாது.

a)

நிதானத்தில்

b)

நிதானத்தை

c)

நிதானத்தால்

d)

நிதானத்தோடு

4.

அரசன் நாட்டு _________________ நலன் அறிய மாறுவேடத்தில் சென்றான்

a)

மக்களை

b)

மக்களுக்கு

c)

மக்களின்

d)

மக்களோடு

5.

அன்னை திரேசா ஆற்றிய அரிய ___________________ பல ஏழை மக்கள் பயனுற்றனர்.

a)

தொண்டால்

b)

தொண்டுகளில்

c)

தொண்டுகளை

d)

தொண்டுகளுக்கு

6.

இளையர்கள் தமிழ் _______________ வாசிப்பதால் பல பயனுள்ள தகவல்களைப் பெறுகிறார்கள்.

a)

புத்தகங்களை

b)

புத்தகங்களில்

c)

புத்தகங்களோடு

d)

புத்தகங்களுக்கு

7.

“என் ________________ முக்கிய காரணமாக இருந்தவர் என் தந்தை,” என்று அலி மகிழ்ச்சியுடன் கூறினான்.

a)

வெற்றியை

b)

வெற்றியில்

c)

வெற்றிக்கு

d)

வெற்றியின்

8.

தம் பிள்ளை ________________ பழகுவதை ஒவ்வொரு பெற்றோரும் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

a)

தீயவர்களுக்கு

b)

தீயவர்களோடு

c)

தீயவர்களை

d)

தீயவர்களில்

9.

முத்து தன்னுடைய முரட்டுத்தனமான ________________ காரணமாக வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது.

a)

பிடிவாதத்துக்கு

b)

பிடிவாதத்தின்

c)

பிடிவாதத்தை

d)

பிடிவாதத்தில்

10.

ராணி பையுடன் தன் __________________ புறப்பட்டதும் மழை பெய்யத் தொடங்கியது.

a)

வீட்டில்

b)

வீட்டை

c)

வீட்டின்

d)

வீட்டிலிருந்து