NEW
Font size
Worksheetsசெய்யுள் மொழியணி
Total questions: 10
Worksheet time: 5mins
உரையாடலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க. "கேசவா, நீ எந்தச் செயலைச் செய்தாலும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்."
ஏவா மக்கள் மூவா மருந்து
ஐயம் புகினும் செய்வன செய்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
ஊக்கம் உடமை ஆக்கத்திற்கு அழகு
கூற்றுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய். "செல்வா, இனிமேல் கடுஞ்சொற்களால் பேசி மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தாதே!"
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
பாடல் வரிக்குத் தொடர்புடைய உலகநீதியைத் தெரிவு செய்க.
இமைபோல் இரவும் பகலும் எனைக் காத்த அன்னையயே - உனது அன்பு பார்த்த அதைவிட வானம் பூமி யாவும் சிறியது...
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
பாடத்தை முழுமை பெறாத நிலையில் செய்திருந்த மலர்விழியை ஆசிரியர் கண்டித்தார்.
தொடர்புடைய இணைமொழியைத் தெரிவு செய்க.
ஆடிப்பாடி
அங்கும் இங்கும்
பழக்க வழக்கம்
அரை குறை
கீழ்காணும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
"எனது வெற்றிக்கு என் பெற்றோர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும்தான் காரணம்."
புத்திமான் பலவான்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
உடற்பயிற்சி செய்வோம்; உடல் நலத்தோடு வாழ்வோம்!!
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
வெள்ளம் வருமுன் அணை போடு
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற செய்யுளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
திவ்யன் பூப்பந்து போட்டியில் வெற்றிப் பெற உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் மன உறுதியோடு பயிற்சி செய்து வந்தான். இறுதியில் அவன் வெற்றியும் பெற்றான்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்கு றூம்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
அறஞ்செய விரும்பு என்ற ஆத்திச்சூடிக்குத் தொடர்புடைய உலகநீதியைத் தெரிவு செய்க.
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
முத்தமிழ் விழாவில் இடம்பெற்ற பேச்சுப் போட்டியில் புனிதா தனக்குள் மறைந்திருந்த பேச்சாற்றலை வெளிப்படுத்தி அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தாள்.
காட்டுத் தீ போல
இலைமறை காய் போல
சிலை மேல் எழுத்துப் போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
கீழ்க்காணும் திருக்குறளுக்குத் தொடர்புடைய கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
ஏவா மக்கள் மூவா மருந்து
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
