wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6- உணவு பதனிடுதல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உணவு பதனிடுதல் என்பதன் பொருள் என்ன?

a)

உணவிலுள்ள அனைத்து குச்சியங்களையும் கொல்லும் செயற்பாங்கு

b)

கெட்டுப் போவதைத் தாமதப்படுத்த உணவைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாங்கு

c)

காலத்திற்கும் உணவின் புதியத் தன்மையை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாங்கு

d)

பல வருடங்களுக்கு உணவின் தாதுச்சத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாங்கு

2.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலை எது?

a)

போதிய வெப்பம் மற்றும் உலர்ந்த நிலை

b)

குளிர் மற்றும் உலர்ந்த நிலை

c)

போதிய வெப்பம் மற்றும் ஈரத்தன்மை

d)

குளிர் மற்றும் ஈரத்தன்மை

3.

இரு நாள்களாக மேசையின் மீது வைக்கப்பட்ட ஒரு குவளையிலுள்ள பால் புளிப்பு சுவையோடு திரிந்தும் விட்டது. இந்நிலை ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

தூசு

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது தவறான கூற்றாகும்?

a)

உப்பேற்றம் - உப்பைக் கொண்டு தடவுதல்

b)

உலர வைத்தல் - நீரை நீக்குதல்

c)

ஊற வைத்தல் - வினிகர், உப்பு மற்றும் சீனியைப்

பயன்படுத்தி ஊற வைத்தல்.

d)

குளிர்ந்துறைத்தல் - 0℃ முதல் 5℃ வெப்பநிலையில் வைத்தல்.

5.

படம் ஒருவித உணவைக் காட்டுகிறது.

மேற்காணும் உணவுப் பொருளின் தன்மை ஏறக்குறைய இரு மாதங்களுக்கு மாறாமல் இருக்க உணவுப் பதனிடும் முறையில் எது சிறந்த்தாகும்?

a)

மெழுகிடுதல்

b)

கொதிக்க வைத்தல்

c)

குளிர்ப்படுத்துதல்

d)

குளிர்ந்துறையச் செய்தல்

6.

உலர்ந்த உணவைக் காட்டிலும் ஈரத்தன்மையுள்ள உணவு ஏன் விரைவில் கெடுகிறது?

a)

ஈரத்தன்மையுள்ள உணவு குச்சியங்களுக்கு அதிக தாதுச்சத்தைத் தருகிறது.

b)

ஈரத்தன்மையுள்ள நிலையில் குச்சியங்கள் விரைவாக வளரும்.

c)

ஈரத்தன்மையுள்ள உணவில் அதிக காற்று இருக்கும்.

d)

ஈரத்தன்மையுள்ள உணவு வெப்பமாக இருக்கும்.

7.

மலையேறும் நடவடிக்கையின்போது அமின் தான் கொண்டு வந்த கோழி இறைச்சி மலை உச்சியில் இருக்கும்போது அதிக நேரம் கெடாமல் இருப்பதை உணர்ந்தான். இந்நிலைக்கான காரணம் என்ன?

a)

மலை உச்சியில் வெப்பநிலை குறைவாக இருக்கும்.

b)

அப்பகுதியில் குச்சியங்கள் வாழவில்லை

c)

மலைப்பகுதியில் சூரிய ஒளி வெளிச்சமாக இருக்கும்.

d)

அப்பகுதியில் உள்ள காற்று உலர்ந்துவிட்டது

8.

கீழ்க்காண்பனவற்றுள் எது புகையிடும் செயற்பாங்கைப் பற்றிய சரியான கூற்றாகும்?

a)

அதிக நேரத்திற்கு சூரிய ஒளியில் உலர வைக்கப்படும் ஒரு முறையாகும்.

b)

அதிக நேரத்திற்கு புகையிட்டு வெப்பப்படுத்தி உலர வைக்கப்படும் ஒரு முறையாகும்.

c)

குறிப்பிட்ட வெப்பநிலைக்கு ஏற்ப சூடாக்கிய பின் உடனே குளிர்ப்படுத்துதல்.

d)

ஒரு நாள் முழுவதும் உணவிலுள்ள நீரை வெளியேற்றும் செயற்பாங்கு

9.

படம் பாஸ்டர் செய்யப்பட்ட பாலைக் காட்டுகிறது.


கீழ்க்காண்பனவற்றுள் எது பாலை பாஸ்டர் செய்யும் செயற்பாங்கின் சரியான நிரலாகும்?

a)

புட்டியலிடுதல் - கொதிக்க வைத்தல்

b)

வெப்பப்படுத்துதல் - புட்டியலிடுதல்

c)

வெப்பப்படுத்துதல் - குளிர்ப்படுத்துதல்

d)

குளிர்ப்படுத்துதல் - வெப்பப்படுத்துதல்

10.

படம் கெட்டுப்போன ஒரு தட்டு சோற்றைக் காட்டுகிறது. கெட்டுப்போன சோற்றின் தன்மை என்ன?

a)

வழவழப்புத் தன்மை மற்றும் கரும்புள்ளிகள்

b)

மஞ்சள் நிறம் மற்றும் துர்நாற்றம் வீசும்

c)

நுரைத்தள்ளும் மற்றும் இழையமைப்பில் மாற்றம்

d)

பூஞ்சணம் வளர்ந்து திட்டு திட்டாக இருக்கும்.