wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு (23.7.2020)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஓட்டப்பந்தயத்தில் ஓடிய மாதவனுக்குத் தாகம் எடுத்தது. அவன் தண்ணீர் குடித்துத் தன் தாகத்தை _____________ கொண்டான்.

a)

தணித்து

b)

தனித்து

2.

உடற்குறையுள்ளவர்கள் _____________

சவாரி செய்வதினால் மனரீதி அளவில் பல நன்மைகளைப் பெறுவர் என மனத்தத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டுள்ளனர்.

a)

பரியில்

b)

பறியில்

3.

தற்போது வீட்டிலுள்ள பெரும்பாலோர் வானொலியை விரும்பிக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அதில்__________________ தரமான நிகழ்ச்சிகளே இதற்குக் காரணமாகும்.

a)

ஒலிப்பரப்படும்

b)

ஒளிப்பரப்படும்

4.

தச்சர் மரக்கட்டைகளை நன்றாக _________________ அவற்றிற்குப் பல வண்ணங்கள் சேர்த்து அழகிய மேசை நாற்காலிகளை உருவாக்கினார்.

a)

இளைத்து

b)

இழைத்து

5.

மாறன் தன் அப்பாவின் பிறந்தநாளன்று அவருக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாக வாங்கினான். கடைக்காரரிடம் அப்பாவின் பெயரை அதில் ___________ சொன்னான்.

a)

பொரிக்க

b)

பொறிக்க

6.

நான் தேர்வில் சிறப்பாகச் செய்ததால் என் அத்தை எனக்குப் பரிசளித்து உற்சாக மூட்டினார். அப்பரிசு மிகவும் _________ உயர்ந்த ஒரு மடிகணினி ஆகும்.

a)

விளை

b)

விலை

7.

அப்பா காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடித்துவிட்டு முதலில் ____________ வணக்கம் செய்வது வழக்கம். அதன் பிறகுதான் அவர் உணவு உண்பார்

a)

இரை

b)

இறை

8.

அம்மா சமையல் வேலையைத் தொடங்க எண்ணினார். அதனால், அவர் தூக்கிக்கொண்டிருந்த குழந்தையை _________ படுக்க வைத்தார்.

a)

ஏணை

b)

ஏனை

9.

சோமுவுக்கு கடல் அலைகளைப் பார்க்க மிகவும் விருப்பம். அவர் கடல் __________ பக்கத்தில் வீடு கட்ட விரும்பினார்.

a)

கரைக்கு

b)

கறைக்கு

10.

குமார் விளையாட்டு மைதானத்தில் நண்பர்கள் விளையாடுவதைக் கண்டான். அவன் ஐந்தாவது மாடியிலிருந்து __________ வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

a)

இரங்கி

b)

இறங்கி