wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 22

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

யூதர்கள், ஜனங்கள் எப்பொழுது அமைதியாயிருந்தார்கள்?

a)

பவுல் பேசத் தொடங்கினபோது

b)

எபிரேயு பாஷையிலே பவுல் பேசின போது

c)

சேனாபதி கட்டளையிட்ட போது

2.

பவுல் யார் பாதத்தின் அருகே வளர்ந்தார்?

a)

அகபு

b)

மூப்பர்

c)

கமாலியேல்

3.

இயேசுவை பின்பற்றும் மார்க்கத்தாரை சிறைச்சாலைகளில் ஒப்புவித்து மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். - கூறியது யார் ?

a)

கமாலியேல்

b)

சேனாபதி

c)

பவுல்

4.

இயேசுவை பின்பற்றியவர்களை மரணபரியந்தம் துன்பப்படுத்தியதற்கு யார் யார் சாட்சிகளாய் இருப்பார்கள் என்று பவுல் கூறினார்?

a)

சீஷர்கள்

b)

எருசலேம் ஜனங்கள்

c)

மூப்பர், பிரதான ஆசாரியர்

5.

எங்கே இருக்கிறவர்களை தண்டிக்கிறதற்க்காக நிரூபங்களை வாங்கி கொண்டு வந்தான்?

a)

எருசலேம்

b)

தமஸ்கு

c)

தர்சு

6.

பவுல் தமஸ்குவிலிருந்து இயேசுவை பின்பற்றுகிறவர்களை எங்கே கட்டி கொண்டு வர நிரூபங்களை வாங்கி வந்தார்?

a)

எருசலேம்

b)

தர்சு

c)

சிலிசியா

7.

எங்கே ஆண்டவராகிய இயேசு, பவுலை சந்தித்து பேசினார்?

a)

தமஸ்கு

b)

தர்சு

c)

எருசலேம்

8.

பக்தியுள்ளவனும், தமஸ்குவில் குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சி பெற்றவனுமாயிருக்கிற _______என்னும் ஒருவன், சவுலே பார்வையடைவாயாக என்றான்.

a)

கமாலியேல்

b)

அகபு

c)

அனனியா

9.

எதற்காக பவுலை முன்னமே ஆண்டவர் தெரிந்து கொண்டார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

தேவனுடைய திருவுளத்தை அறியவும்

b)

சாட்சியாய் இருக்கவும்

c)

அவருடைய திருவாய் மொழியைக் கேட்கவும்

d)

நீதிபரரை அறியவும்

e)

இவற்றில் எதுவும் இல்லை

10.

உன் பாவங்கள் போக கழுவப்படு - யார் யாரிடம் கூறியது?

a)

கமாலியேல் பவுலிடம்

b)

பவுல் சேனாபதியிடம்

c)

அனனியா பவுலிடம்

11.

பவுல் எப்போது ஞான திருஷ்டியடைந்து ஆண்டவரை தரிசித்தார்?

a)

தர்சு தேவாலயத்தில்

b)

எருசலேம் தேவாலயத்தில்

c)

தமஸ்கு தேவாலயத்தில்

12.

பவுலை எங்கே அனுப்புவேன் என்று ஆண்டவர் கூறினார்?

a)

யூதர்களிடத்தில்

b)

கிரேக்கரிடத்தில்

c)

புற ஜாதிகளிடத்தில்

13.

ஆண்டவருடைய சாட்சியாகிய யாருடைய இரத்தம் சிந்தப்படுகிற போது, கொலை செய்ய சம்மதித்து இருந்தேன் என்று பவுல் கூறினார்?

a)

அனனியா

b)

ஸ்தேவான்

c)

அகபு

14.

அவர்கள் கூக்குரலிட்டு மேல் வஸ்திரங்களை எறிந்து ஆகாயத்திலே புழுதியைத் தூற்றினார்கள். யார் அவர்கள்?

a)

சவுலுடன் வந்த சீஷர்கள்

b)

ஜனங்கள்

c)

ஆலோசனை சங்கத்தார்

15.

பவுல் நூற்றுக்கு அதிபதியிடம் என்ன கூறினான்?  (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

இயேசுவை பற்றி

b)

நான் ரோமன் என்று, நியாயத்தை பற்றி

c)

நான் நியாயம் விசாரிக்கப்படாத மனுஷன் என்று

d)

ரோமரை பற்றி

e)

கமாலியேல் பற்றி

16.

இந்த மனுஷன் ரோமன் - யார் யாரிடம் கூறியது?

a)

நூற்றுக்கு அதிபதி, சேனாபதியிடம்

b)

சேனாபதி,மூப்பரிடம்

c)

சேனாபதி, பிரதான ஆசாரியரிடம்

17.

நானோ இந்த சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன்- யார் யாரிடம் கூறியது?

a)

பவுல் சேனாபதியிடம்

b)

சேனாபதி பவுலிடம்

c)

எதுவும் இல்லை

18.

சேனாபதி ஏன் பயந்தான்?

a)

ரோமனென்று அறிந்து,பவுலை கட்டுவித்ததினால்

b)

அடித்து விசாரித்ததினால்

c)

எதுவும் இல்லை

19.

சேனாபதி யாரையெல்லாம் கூடி வரும் படி கட்டளையிட்டான்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தேடுக்கவும் )

a)

பிரதான ஆசாரியர்

b)

யூதர்கள்

c)

போர்ச்சேவகர்

d)

சீஷர்கள்

e)

மூப்பர்

20.

இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்ற வேண்டும் - யார் யாரைப் பார்த்து கூறியது?

a)

பவுல் ஸ்தேவானை பார்த்து

b)

பவுல் சேனாபதியை பார்த்து

c)

ஜனங்கள் பவுலை பார்த்து