Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை/ ஒலி வேறுபாடு

Total questions: 9

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

குணாளன் நாள்தோறும் பலவகையான வாசனைத் திரவியங்களை ____________________ பூசிக்கொள்வான்.

a)

உடலுக்கு

b)

உடலில்

c)

உடலின்

d)

உடலை

2.

தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற வசதி குறைந்த _____________________ கல்விச் செலவைப் பள்ளி ஏற்றுக்கொண்டது.

a)

மாணவர்களை

b)

மாணவர்களில்

c)

மாணவர்களின்

d)

மாணவர்களோடு

3.

____________________ பேருந்தில் ஏறிய பெண்மணிக்கு ஒரு பள்ளி மாணவன் உடனே எழுந்து உட்கார இடமளித்தான்.

a)

கைக்குழந்தையுடன்

b)

கைக்குழந்தைக்கு

c)

கைக்குழந்தையை

d)

கைக்குழந்தையின்

4.

தன் வேலையை இழந்த முகிலனின் தந்தை __________________ அவதியுற்றார்.

a)

மன உளைச்சலால்

b)

மன உளைச்சலுக்கு

c)

மன உளைச்சலிடம்

d)

மன உளைச்சலை

5.

தமிழ்மொழி வாரத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை போட்டிக்குப் பல _________________ மாணவர்கள் பங்கேற்க வந்திருந்தார்கள்.


a)

பள்ளிகளில்

b)

பள்ளிகளை

c)

பள்ளிகளிடம்

d)

பள்ளிகளிலிருந்து

6.

பல நாட்கள் பசியால் வாடிய நாகப்பாம்பு கீரி ஒன்றை கண்டது. அது உடனே அதன் கழுத்தை (a)   கொன்று தின்றது.

7.

சிங்கப்பூரைச் சுற்றி பல தீவுகள் உள்ளன. அழகும் பசுமையும் நிறைந்த இத்தீவுகள் சிங்கப்பூருக்கு இயற்கை (a)   அமைந்து அதை சுனாமி பேரலையிடமிருந்து பாதுகாக்கின்றன.

8.

நாம் நம் வாழ்க்கையில் (a)   பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் நாம் சமுதாயத்தில் நல்ல பெயரெடுக்க முடியும்.

9.

ஆசிரியர் எங்களைக் கற்றல் பயணத்திற்காக ‘விசு மாட்டுப் பண்ணை’க்கு அழைத்துச் சென்றார். அங்கே ஊழியர்கள் மாடுகளிடம் பால் (a)   கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.