NEW
Font size
WorksheetsLuke 19-24
Total questions: 20
Worksheet time: 20mins
சகேயு சீக்கிரமாய் காட்டத்தி மரத்திலிருந்து இறங்கி, ................ இயேசுவை அழைத்துக்கொண்டு போனான்
முறுமுறுத்தலோடே
சந்தோஷத்தோடே
எப்படிப்பட்டவரோ என்று நினைத்துக்கொண்டே
துக்கத்தோடே
பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்ட உவமையை எதற்காகச் சொன்னார்?
எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினால்.
தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினால்.
மற்ற இரண்டும்
எதுவும் இல்லை
திரவியத்தைக் காசுக்கடையிலே வைத்திருந்தால் எஜமான் வரும்போது, என்ன கிடைத்திருக்கும்?
அசல் தொகை
இருமடங்கு அளவு
பாதுகாப்பான தொகை
வட்டி தொகை
இவர்கள் பேசாமலிருந்தால் ................... கூப்பிடும்.
கழுதைகளே
கல்லுகளே
சீஷர்களே
சிறு குழந்தைகளே
நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்று யார் கேட்டார்கள்?
பிரதான ஆசாரியர்.
வேதபாரகர்.
தேவாலய மூப்பர்கள்.
அவர்கள் அனைவரும்.
வீடு கட்டுகிறவர்கள் ............. ............ கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
தேவை என்று வைக்கப்பட்ட
முக்கியமாக வைக்கப்பட்ட
ஆகாதென்று தள்ளின
நொறுங்கிப் போன
இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று ஏன் கேட்டார்கள்.
தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய் அறிந்து கொள்ள.
அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்க.
தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பித்து கொள்ள.
அவர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறதைப் பார்க்க.
மறுமையையில் பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் ............ .................... தேவனுக்குப் பிள்ளைகளாயிருப்போம்
தேவதூதருக்கு ஒப்பானவர்களாய்,
மனிதனைப் போல
ஜீவனுள்ளவர்களைப் போல
தாவீதின் குமாரர்களைப் போல
நாம் யாரைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?
ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்கார விரும்புவோர்.
விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்க விரும்பிகிறவர்கள்.
பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிறவர்கள்.
பதில்கள் அனைத்தும்
எவ்வாறு ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள்?
இரண்டு காசைப் போட்டாள்
பரிபூரணத்திலிருந்தெடுத்து போட்டாள்
தனக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டாள்.
தன்வறுமையிலிருந்து ஒரு பகுதியைப் போட்டாள்.
இயேசுவின் நாமத்தினிமித்தம், உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, துன்பப்படுத்துவார்கள். அது ................. ................. ஏதுவாயிருக்கும்.
மற்றவர்கள் கவலைப்படாதிருக்க
உங்களுக்குச் சாட்சியாவதற்கு
நாம் அனைவரும் பயப்படாதிருக்க
நாம் தைரியமாக இருக்க
உங்கள் ....................... உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
பொறாமையினால்
பெருமையினால்
பொறுப்புணர்வினால்
பொறுமையினால்
இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நாம் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, என்ன செய்ய வேண்டும்?
லவுகீக கவலைகளினால் பாரமடையாமல் இருக்க வேண்டும்
பெருந்திண்டியினாலும் வெறியினாலும் குழப்பமடைய வேண்டும்
எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்க வேண்டும்
எப்பொழுதும் வேத வார்த்தைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும்
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, யாருக்கு பயப்பட்டபடியினால் வகைதேடினார்கள்.
தேவனுக்கு
ஜனங்களுக்கு
யூதாசுக்கு
சீஷருக்கு
இயேசு சீமோனின் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு வேண்டிக்கொண்டார்; அவன் குணமடைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று⁸ சொன்னார்?
சகோதரரை ஸ்திரப்படுத்து
கோதுமையை புடை
மீண்டும் மறுதலி
நெருப்பண்டையிலே உட்கார்
நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்று இயேசு கூறினார்.
அவர்களின் தூக்கத்திற்கு காரணம் என்ன?
சோர்வு
பெருந்தீனி
துக்கம்
மன அமைதி
இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். யாருடைய காதைத்தொட்டு சொஸ்தப்படுத்தினார்
பிரதான ஆசாரியனை
பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை
சேனைத்தலைவரனுடைய வேலைக்காரனை
ஜனத்தின் மூப்பரை
"நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை." இயேசு.
ஆனால் அந்நேரத்தில் அவர்கள் ஏன் அவரைப் பிடித்தார்கள்
பட்டயங்களும் தடிகளும் தயாராகவில்லை
அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள்
அவரைச் சூழநின்றவர்களைக் கண்டு பயந்தார்கள்
அவர்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது
ஏரோதுவினிடத்திற்கு இயேசு ஏன் அனுப்பப்பட்டார்?
அவரைக் காணும்படி ஏரோது ஆசைகொண்டிருந்தான்
இயேசு ஜனங்களைக் கலகப்படுத்தியதனால்
இயேசு கலிலேயன் என்பதைப் பிலாத்து கேட்டறிந்ததும்
பிலாத்து தனது கைகளை கழுவ விரும்பினார்
மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இயேசுவிடத்தில் காணவில்லை என்று எத்தனை முறை பிலாத்து பேசினான்?
இரண்டு முறை
ஒரு முறை
மூன்று முறை
நான்கு முறை
