NEW
Font size
WorksheetsL1 வேற்றுமை
Total questions: 10
Worksheet time: 5mins
ராமு தன் _____________________ நோக்கி நடந்தான்.
வீட்டில்
வீட்டை
வீட்டுக்கு
வீட்டிலிருந்து
மாமா ____________________ வாங்கி வந்த பழங்கள் மிகவும் சுவையாக இருந்தன.
கடையிலிருந்து
கடைக்கு
கடையுடன்
கடையினது
நாம் நம் பாரம்பரிய ________________ கொண்டாடுவதன் வழி நம் கலாசாரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
விழாக்களுக்கு
விழாக்களால்
விழாக்களில்
விழாக்களை
கடற்படை வீரர்கள் கடற்கரை ___________ காவல் காத்து நின்றனர்.
ஓரங்களை
ஓரங்களுக்கு
ஓரங்களில்
ஓரங்களால்
ஏடிஸ் ___________________ டெங்கிக் காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொசுக்கள்
கொசுக்களால்
கொசுக்களில்
கொசுக்களுடைய
நீ என்னைப் பற்றி என் __________ கேட்டுப்பார்.
நண்பனிடம்
நண்பனை
நண்பனுக்கு
நண்பனோடு
முக்குளிப்பாளர்கள் ஆழ் _______________ சென்று முத்துச் சிப்பிகளைச் சேகரித்து வருகின்றனர்.
கடலில்
கடலுக்கு
கடலிலிருந்து
கடலால்
அதிகாலையில் எழுந்து பணிக்குச் செல்வோர் பலர் பேருந்து _____________ விரும்புகின்றனர்.
பயணம்
பயணத்தில்
பயணத்திற்கு
பயணத்தை
தேனீக்கள் ____________ சேகரித்து வரும் தேனைத் தன் கூட்டில் சேர்த்து வைக்கும்.
மலர்களில்
மலர்களால்
மலர்களிலிருந்து
மலர்களது
குருவி ஒன்று ஓவியத்தில் இருந்த பழத்தை உண்மையான பழம் என்று நம்பி __________கொத்தித் தின்றது.
அதனுடன்
அதை
அதனால்
அதற்கு
