Font size
Worksheetsநன்னெறிக்கல்வி: உயர்வெண்ணம் (பகுதி 2)
Total questions: 10
Worksheet time: 5mins
உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ஒருவர் அதிக வாளிகளை எடுத்து வந்து நிற்பதைக் காண்கிறாய்? அவர் செய்வது சரியா?
சரி. அவரது தேவைக்கு ஏற்ப நீரைப் பெற்றுக்கொள்கிறார்.
சரி. அது அவரது உரிமை.
தவறு. நீர் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தவறு. அவர் ஒருவரால் அனைத்து வாளிகளையும் தூக்கிச் செல்ல இயயாது.
உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. நீரைப் பெறும்போது நீ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
பணியாளரிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள் என கேல்வி எழுப்ப வேண்டும்.
நீர் வழங்கிய பணியாளருக்கு நன்றி கூற வேண்டும்.
நிறையை நீர்க் கொள்கலன்களைக் கொண்டு வர வேண்டும்.
வேலைக்குத் தாமதமானதால் முந்திக்கொண்டு செல்லுதல்
பள்ளியில் வசதி குறைந்த மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. உதவி செய்த தனி நபர்களுக்கு உதவி பெற்ற மாணவர்கள் நன்றி கூறினர். இதனால் ஏற்படும் விளைவு என்ன?
தனிநபர்கள் மாணவர்களிடம் உள்ள உயர்வெண்ணத்தைப் பாராட்டுவர்.
தனிநபர்கள் தொடர்ந்து பள்ளிக்கு உதவி புரிவர்.
பள்ளிக்கு அதிக மாணவர்கள் பதிவு செய்வர்.
மாணவர்கள் வசதி குறைந்த மாணவர்களைக் கேளி செய்வர்.
திருக்குறளுக்குப் பொருத்தமான சூழல் யாது?
நீர்த்தடை ஏற்பட்டு ஒரு நாள் கழித்து நீர்ப் பங்கீடு வழங்கப்பட்டதால் மக்கள் பணியாளர்களிடம் கடுமையாகப் பேசினர்.
நீர்த்தடை ஏற்பட்டு ஒரு நாள் கழித்து நீர்ப் பங்கீடு வழங்கப்பட்டாலும் சிங் குவான் நீரைப் பெற்றப் பின் நன்றி கூறினான்.
மூக்குக்கண்ணாடியை இலவசமாகப் பெற்ற மாணவர்களில் சிலர் நன்றி கூறவில்லை.
மலேசிய மக்களில் சிலர் குருதி தானம் செய்ய தயங்கினர்.
"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" எனும் செய்யுள் அடியின் விளக்கம் எச்சூழலுக்குப் பொருந்தும்?
ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட இராஜா லிங்கேஸ்வரர் ஏழை எளியவர்களுக்குத் தன் சுய உழைப்பால் அன்னதானம் செய்து மகிழ்ந்தார்.
சில உறவினர்கள் தம்மை ஏமாற்றியதால் இராமசாமி இன்று எவருக்கும் உதவாத கருமியானார்.
சியூ மெங் ஒவ்வொரு வியாழனும் ஏழை எளியோர்க்கு உதவுவார்.
தமக்கு உதவிய பெரியவருக்கு அகிலா நன்றி கூறினாள்.
சிறுநீரக சுத்திகரிப்பு நிலையத்தில் எச்சூழல் உயர்வெண்ணத்தைக் காட்டவில்லை?
பணியாளர்கள் கனிவாகப் பேசுவர்.
நோயாளிகள் பணிவாகப் பேசுவர்.
நோயாளிகள் நன்றி கூறுவர்.
சிகிச்சைப் பெற்றபின் வீடு திரும்புதல்.
அரசாங்க உதவித் தொகை பெற்ற அன்பழகன் விலை உயர்ந்த துரித உணவை வாங்கி பணத்தைச் செலவழித்தார்.
சரி
பிழை
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரி?
தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவி பெற்றோர்களும் ஆசிரியர்களுமே தமது வெற்றிக்குக் காரணம் என்று பேட்டி அளித்தாள்.
தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவி தனது வெற்றிக்கு உழைப்பு மட்டுமே இரகசியம் என கூறினாள்.
அமினா சாலையில் மற்ற ஓட்டுனர்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் மகிழுந்தை செலுத்தினாள்.
சரி
பிழை
சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் மோகன் அவசர பாதையில் சென்றான்.
சரி
பிழை
