NEW
Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும் - இலக்கணம்
Total questions: 18
Worksheet time: 2hrs 30mins
1) திருக்குறளை இயற்றியவர் யார்?
ஔவை
பாரதியார்
திருவள்ளூவர்
கம்பன்
2) திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மொத்தம் எத்தனை?
!330
1430
1530
1630
3) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
_______________________________________________
கோடிடப்பட்ட அடியில் இருக்க வேண்டிய சொற்கள் யாது?
பகவன் முதற்றே உலகு
தெய்வத்துள் வைக்கப் படும்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
அன்றே மறப்பது நன்று
4) அண்டை அயலார் எனும் இணைமொழியின் பொருள் யாது?
உறவினர்கள்
பகைவர்கள்
நண்பர்கள்
சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்
5) எந்தக் காலத்திலும் எனும் பொருளை விளக்கும் இணைமொழி யாது?
ஆடல் பாடல்
அன்றும் இன்றும்
ஆடை அணிகலன்
நன்மை தீமை
6) நெஞ்சாரப் எனும் சொல்லின் பதவுரை யாது?
மனம்
மணம்
மனசாட்சிக்கு விரோதமாக
மனசாட்சிக்கு வெளீயே
7) திரு மாறன் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
மேலேயுள்ள சூழலை விளக்கும் இணைமொழி யாது?
அன்றும் இன்றும்
நன்மை தீமை
அண்டை அயலார்
8) நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
எனும் உலகநீதியின் பொருள்............
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
ஒருநாளும் படிக்காமல் இருக்கக்கூடாது.
தாய் தந்தையரை மாதிக்க வேண்டாம்.
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.
9) வேற்றுமை உருபு மொத்தம் எத்தனை?
8
9
10
11
10) 'ஐ' என்பது ___________________ வேற்றுமை ஆகும்.
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
11) முதலாம் வேற்றுமை உருபுக்கு _________________ இல்லை.
பெயர்ச்சொல்
அடை
எழுத்து
உருபு
12) கயல்விழி ஓவியம் வரைந்தாள்.
சிவப்பு நிறத்தில் உள்ள சொல்லின் வேற்றுமை உருபு யாது?
முதலாம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
13) கடலுக்குச் சென்று மீனவன் _________________ பிடித்தான்.
விடுப்பட்ட இடத்தில் இருக்க வேண்டிய இரண்டாம் வேற்றுமை உருபு சொல் யாது?
மீன்
மீன்களைப்
மீனால்
மீனுக்கு
14) மேசை பலகையால் செய்யப்பட்டது.
எனும் வாக்கியத்தில் உள்ள வேற்றுமை உருபு யாது?
முதலாம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
15) நாடகப்போட்டியில் கதிரவனுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினான்.
வர்ணத்தில் உள்ள சொற்களின் வேற்றுமை உருபு யாது?
இல், கு, ஓடு
இல், கு, உடன்
இல், உடன், ஆல்
இல், உடன், ஒடு
16) மூன்றாம் வேற்றுமை உருபு யாது?
உருபு இல்லை
ஐ
கு
ஆல், ஒடு, ஓடு, உடன், ஆன்
17) ______________________ சென்ற அம்மா இறைவனை வணங்கி அன்னதானம் வழங்கினார்.
கோயில்
கோயிலுடன்
கோயிலுக்குச்
கோயிலோடு
18) திருக்குறளின் 3 பிரிவு யாது?
வல்லினம், மெல்லினம், இடையினம்
அறம் , பொருள், இன்பம்
ஒருமை, பன்மை, பலர்
