Worksheetsசெய்வினை செயப்பாட்டுவினை
Total questions: 8
Worksheet time: 6mins
கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்கு செயப்பாட்டுவினை வாக்கியத்தை தேர்ந்தெடுக.
கதிரேசன் மரத்தை வெட்டுகிறார்.
மரம் கதிரேசனை வெட்டியது.
கதிரேசன் மரத்தால் வெட்டப்பட்டார்.
மரம் கதிரேசனால் வெட்டப்படுகிறது.
செய்வினை வாக்கியத்தில் _______________ முதலில் வரும்.
பயனிலை
எழுவாய்
செயப்படுபொருள்
கொடுக்கப்பட்டுள்ள செயப்பாட்டுவினை வாக்கியத்திற்கு செய்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக.
பாடம் ஆசிரியரால் போதிக்கப்பட்டது.
ஆசிரியர் பாடம் போதித்தார்.
பாடம் ஆசிரியரை போதித்தது.
பாடம் ஆசிரியரால் போதிக்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஜெயலெட்சுமி தோட்டத்தில் பூச்செடிகளை நட்டாள்.
தோட்டத்தில் பூச்செடிகளை ஜெயலெட்சுமி நட்டாள்.
பூச்செடிகள் ஜெயலெட்சுமியால் தோட்டத்தில் நடப்பட்டது.
ஜெயலெட்சுமி பூச்செடிகளைத் தோட்டத்தில் நட்டாள்.
பூச்செடிகளால் ஜெயலெட்சுமி தோட்டத்தில் நடப்பட்டாள்.
கீழ்க்காண்பனவற்றுள் எது செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியம் அல்ல ?
செய்வினை = தமிழரசி பாடம் செய்தாள்.
செயப்பாட்டுவினை = பாடம் தமிழரசிக்குச் செய்யப்பட்டது.
செய்வினை = குமணன் மாம்பழம் பறித்தான்.
செயப்பாட்டுவினை = மாம்பழம் குமணனால் பறிக்கப்பட்டது.
செய்வினை = ஆசிரியர் அழகியைப் பாராட்டினார்.
செயப்பாட்டுவினை = அழகி ஆசிரியரால் பாராட்டப்பட்டார்.
செய்வினை = அரசு கோவில் கட்டினார்.
செயப்பாட்டுவினை = கோவில் அரசரால் கட்டப்பட்டது.
கீழ்க்காணும் செயப்பாட்டுவினை வாக்கியத்திற்கு ஏற்ற செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நடனம் நடனக் கலைஞர்களால் சிறப்பாக ஆடப்பட்டது.
கலைஞர்கள் நடனத்தைச் சிறப்பாக நடனம் ஆடினர்.
நடனத்தை சிறப்பான நடனக் கலைஞர்கள் ஆடினர்.
சிறப்பான நடனத்தை நடனக் கலைஞர்கள் ஆடினர்.
நடனக் கலைஞர்கள் நடனத்தைச் சிறப்பாக ஆடினர்.
கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றுக.
குமுதா சிறப்பாக நடனம் ஆடினாள்.
சிறப்பான நடனத்தைக் குமுதா ஆடினாள்.
சிறப்பாக நடனம் ஆடினாள் குமுதா.
நடனம் குமுதாவால் சிறப்பாக ஆடப்பட்டது.
சிறப்பாக ஆடப்பட்ட நடனம் குமுதாவுடையது.
செயப்பாட்டுவினை வாக்கியத்தில் _______________ முதலில் வரும்.
பயனிலை
எழுவாய்
செயப்படுபொருள்
