Worksheetsதமிழ்மொழிப் பயிற்சி: 2
Total questions: 10
Worksheet time: 5mins
ஊர் மக்களால் பிடிபட்ட திருடன் ............ என முளித்தான்.
துருதுரு
வெலவெல
திருதிரு
நறு நறு
குடு குடு எனும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?
தரையில் உராயும் வகையில் இழுத்தல்
குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது நடப்பது.
வேகமாக செயற்படல்
சிறகுகளை அடித்துக் கொள்ளல்
'அருந்தமிழ்' என்றால் என்ன?
பசுமையான தமிழ்.
அருமையான தமிழ்.
இனிமையான தமிழ்.
வல்லமையான தமிழ்.
அடைமொழி எத்தனை வகைப்படும்?
2
4
3
1
'மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்ற குறளின் பொருள் என்ன?
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன்
முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
'வெள்ளை நிறத்தொரு பூனை' என்ற பாடலை இயற்றியவர் யார்?
ஔவையார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
பொருள்: இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது.
பேராசை பெருநட்டம்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
திருவள்ளுவர் நமக்கு __________________ திருக்குறளின் வழி நம் வாழ்க்கைக்குத் தேவையான பல அறநெறிகளைக் கற்றுக்கொள்ளலாம்.
அளிக்க
அளிக்கும்
அளித்த
அளிக்கின்ற
அவளது உடல் காய்ச்சல் காரணமாக ............. என்று இருந்தது .
மெது மெது
கணகண
வளுவளு
கொழு கொழு
பொருள்:
வெள்ளை நிறத்தில் ஒரு பூனை எங்கள் வீட்டில் வளர்கிறது. அந்தப் பூனை குட்டிகளை ஈன்றது. அவை பல வண்ணங்களில் இருந்தன. பல வண்ணங்களில் இருந்தாலும், தாய் பூனை அவற்றிடம் வேறுபாடு காட்டுவதில்லை. அதற்கு அவை யாவும் சமமே.
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
சாம்பல் நிறத்தொரு குட்டி
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
