WorksheetsCategory A (Tie Breaking)
Total questions: 20
Worksheet time: 20mins
ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அந்த நான்கு உபவேதத்தை வரிசை படுத்தவும்?
தனுர் வேதம், காந்தர்வ வேதம், சில்ப வேதம், ஆயுர்வேதம்
ஆயுர்வேதம், காந்தர்வ வேதம், சில்ப வேதம், தனுர் வேதம்
ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், சில்ப வேதம்
காந்தர்வ வேதம், ஆயுர்வேதம், சில்ப வேதம், தனுர் வேதம்
தம்பிரான் தோழன் எனப்படுபவர் யார் ?
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
சுந்தரர்
திருநாவுக்கரசர்
சொல்லின் செல்வன் என்று அழைக்கப்படுபவர் யார்?
இராமன்
அனுமன்
இலட்சுமணன்
சுக்ரீவன்
‘’தொண்டர் சீர் பரவுவார்’’ எனப் பாராட்டப்படும் சான்றோர் யார் ?
திருவள்ளுவர்
கம்பர்
திருநாவுக்கரசர்
சேக்கிழார்
“திருத்தொண்டர் புராணத்தை” எவ்வாறு அழைப்பர்?
சிவ புராணம்
பெரிய புராணம்
கந்த புராணம்
தணிகை புராணம்
ஐந்து உறுப்பு தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குவதை எப்படி அழைப்பர்?
குரு வணக்கம்
பஞ்சாங்க வணக்கம்
இறை வணக்கம்
மூத்தோர் வணக்கம்
இறைவன் தன்னுடைய சொரூப நிலையிலிருந்து இறங்கி வந்து படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களையும் நிகழ்த்துகின்றார். இப்படி நிகழ்த்தும் நிலையை என்ன நிலை என்பர் ?
போகநிலை
வேகநிலை
யோகநிலை
தடத்த நிலை
சிவ வடிவங்களை உரு, அரு, அருஉரு என மூன்றாக வகைப்படுத்துகின்றனர். இதனை சைவர்கள் வேறு விதமாகவும் அழைப்பதுண்டு. அது யாவை ?
சத்தர், இறைவன், உயிர்
பிரவிருத்தர், சத்தர், பரம்பொருள்
இறைவன், ஆன்மா, உடல்
சகளம், திருமேனி, உலகம்
குமுதவல்லி என்பவர் எந்த ஆழ்வாரின் மனைவி?
திருமங்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
மாறநாயனார்
திரு நீலகண்டர்
சுந்தரர்
அப்பூதியடிகளார்
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர். இவர் எந்த நாயண்மார் ?
அமர்நீதியார்
ஏனாதிநாதர்
எறிபத்தர்
கண்ணப்பர்
‘திருமந்திரம்’ சைவத்திருமுறைகளுள் எந்தத் திருமுறை ஆகும் ?
பதினோராம்
பத்தாம்
பன்னிரண்டாம்
எட்டாம்
மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமாலையை யாருக்குப் பரிசாக அளித்தார் ?
திருமலைநாயக்கர்
பரஞ்சோதி முனிவர்
குமரகுருபரர்
சீத்தலை சாத்தனார்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார் ?
மாணிக்கவாசகர்
நாதமுனிகள்
பொய்கையார்
பூதத்தார்
சைவத்தின் அகப்புற சமயங்கள் எத்தனை ?
7
6
5
4
‘குன்று தோறாடல்’ என்பது முருகனின் எந்தத் திருத்தலம் ?
திருத்தணி
பழமுதிர் சோலை
பழனி
திருச்செந்தூர்
தெய்வானை யாருடைய மகள் ?
பிரம்மன்
இந்திரன்
வருணன்
அக்னி தேவன்
வைணவ மடத்தின் தலைவர்களை எப்படி அழைப்பார்கள் ?
பிராமணன்
ஐயர்
அடிகளார்
ஜீயர்
முகுந்தமாலை எனும் நூலை எழுதியவர் யார்?
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
குலசேகர ஆழ்வார்
தொண்டர்டிப்பொடி ஆழ்வார்
நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் திருக்குறுந்தாண்டகத்தை அருளியவர் யார் ?
திருமழிசை ஆழ்வார்
பொய்கையாழ்வார்
ஆண்டாள்
திருமங்கை ஆழ்வார்
