wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (set 3)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இமய மலையில் ஏறும் போது உறை ___________யின் தோற்றம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

a)

பனி

b)

பணி

2.

வீட்டுப் _________ப்பெண்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்துவதுதான் மனித நேயமாகும்.

a)

பனி

b)

பணி

3.

அவ்வுணகத்தில் வாழை __________ச் சாப்பாடு சுவையாக இருந்ததால் வியாபாரம் சிறப்பாக இருந்தது.

a)

இலை

b)

இழை

4.

தான் தவறு _________த்துவிட்டதாக நினைத்து அவன் வருந்தினான்.

a)

இலை

b)

இழை

5.

திருக்குறளுக்கு _________ எழுதிய ஆசிரியர்களுள் டாக்டர் மு. வரதராசனாரின் தெளிவுரை மாணவர்களுக்கு எளிமையாக உள்ளது.

a)

உரை

b)

உறை

6.

கால் __________ அணியாமல் பள்ளிக்கு வந்த மாணவர்களைக் கட்டொழுங்கு ஆசிரியர் கண்டித்தார்.

a)

உரை

b)

உறை

7.

_______ தன் தும்பிக்கையால் மரங்களைச் சாய்த்தது.

a)

கரி

b)

கறி

8.

அம்மா சமைத்த ______யை நான் சோற்றில் ஊற்றி சாப்பிட்டேன்.

a)

கரி

b)

கறி

9.

நாய் தன் எஜமானரைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டு வேகமாகக் _______த்தது.

a)

குரை

b)

குறை

10.

அதிக விலையில் விற்கப்பட்ட அந்தப் பொம்மையின் விலையைக் ____________க்கும்படி அம்மா பேரம் பேசினார்.

a)

குரை

b)

குறை

11.

பலகாரங்களில் _____________ அதிகம் சேர்த்ததால் இனிப்பாக இருந்தது.

a)

வெல்லத்தை

b)

வெள்ளத்தை

12.

கனத்த மழை பெய்ததால் அக்கிராமத்தில் ___________ ஏற்பட்டது.

a)

வெல்லம்

b)

வெள்ளம்

13.

அம்____________ கனிகள் காய்த்துக் தொங்கின.

a)

மரத்தில்

b)

மறத்தில்

14.

_________ கொண்ட வீரர்கள் போர்க்களத்தில் துணிச்சலாகச் போரிட்டனர்.

a)

மரம்

b)

மறம்

15.

மித்திலன் தன் ____________யில் அணியிருந்த நீல நிறத் தொப்பி பார்ப்பதற்கு அழுக்காக இருந்தது.

a)

தலை

b)

தழை

16.

அப்பா __________க் கொண்டு கத்தியைத் தீட்டினார்.

a)

அரத்தை

b)

அறத்தை

17.

முத்து தன் பண்த்தை ஏழைகளுக்கு _______________க் கொடுத்து உதவினார்.

a)

அரமாக

b)

அறமாக

18.

சரியாகத் தேய்த்துக் குளிக்காவிடில் __________ சொறி சிறங்கு ஏற்படும்.

a)

தோல்

b)

தோள்

19.

மாணவர்கள் தங்களது புத்தகப்பையைத் __________ சுமந்து சென்றனர்.

a)

தோலில்

b)

தோளில்

20.

ஆட்டு மந்தைகள் செடி கொடிகளில் பச்சை பசேலென்று இருந்த ______ களைத் தின்றன.

a)

தலை

b)

தழை