wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி பயிற்சி 1

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

“சந்தையில் இன்று காய்கறிகளின் விலை _____________வென உயர்ந்து விட்டது”, என்று அம்மா அலுத்துக் கொண்டார்.

a)

குடுகுடு

b)

கிடுகிடு

c)

தடதட

2.

“___________________ வென்று பேசாமல் இரு. தொலைக்காட்சியில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க முடியவில்லை”, எனத் தாத்தா கடிந்தார்.

a)

தொணதொண

b)

விறுவிறு

c)

கடுகடு

3.

______________ இல்லாமல் பழகும் பிள்ளையை நாம் தெய்வமாக மதிக்க வேண்டும்.

a)

கள்ளங் கபடு

b)

ஊண் உறக்கம்

c)

நாணிக் கோணி

d)

நோய் நொடி

4.

பல நாட்களாக மழை பெய்யாததால் செடிக் கொடிகள் _______________

காணப்பட்டன.

a)

நோய் நொடி

b)

வாடி வதங்கி

c)

ஆடிப்பாடி

d)

நாணிக் கோணி

5.

வெளிநாட்டில் ஐந்து ஆண்டுகள் மேற்படிப்பை முடித்துவிட்டு திரும்பிய சிவா தன் ஆருயிர் நண்பனைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தான்.

a)

அழகுக்கு அழகு செய்வது போல

b)

மலரும் மணமும் போல

c)

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல

d)

தாயைக் கண்ட சேயைப் போல

6.

வகுப்பில் ________________________ பேசியே காலத்தை வெறுமனே கழித்த

சுமதி தேர்வில் சிறந்த தேர்ச்சியடைவதில் கோட்டைவிட்டாள்.

a)

அரைப்படிப்பு

b)

வெட்டிப் பேச்சு

c)

வீடு வாசல்

d)

தோள் கொடுத்தல்.

7.

பல மணிநேரம் சோதனைக்காக மீள்பார்வை செய்த துளசி _______________

பயமின்றிக் காணப்பட்டாள்.

a)

அரைபடிப்பு

b)

எள்ளளவும்

c)

உச்சி குளிர்தல்

d)

தோள் கொடுத்தல்

8.

குடும்பத்தின் வறுமையைப் போக்க பகுதி நேர வேலை செய்தாலும், முரளி

________________________ தன் படிப்பின் மீது முழு கவனம் செலுத்தினான்.

a)

பசுமரத்தாணி போல

b)

மணியும் ஒலியும் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

9.

தந்தையின் திடீர் மறைவினால் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடிக்க

வேண்டும் என்ற அவன் கனவு_________________ ஆனது.

a)

எள்ளளவும்

b)

அரைபடிப்பு

c)

தோள் கொடுத்தல்

d)

கானல் நீர்

10.

ஆயிரம் ஆசை வார்த்தைகள் கூறினாலும் பிறரை ஏமாற்றி வாழ நினைப்பது பாவம் என்ற கொள்கையைக் கொண்ட ரவி, தன் நண்பனின் திட்டத்திற்கு உடன்பட மறுத்தான்.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

d)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல.