wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நடுநிலைமை

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நடுவுநிலைமை என்றால் என்ன ?

a)

எப்பக்கமும் சாராமல் இருப்பது

b)

ஒரு பக்கம் மட்டுமே சார்ந்திருப்பது

2.

நீதிபதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் போது..

a)

இருபக்கமும் உள்ள கருத்துக்களைக் கேட்டறிவார்.

b)

ஒரு பக்கம் மட்டுமே விசாரிப்பார்

3.

திரு.லீ தன் மூன்று பிள்ளைகளுக்கு 2 மச்சில்களை வாங்கினார்.. வீட்டிற்குச் சென்ற அவருடைய பிள்ளைகள் மச்சில்களுக்காக சண்டையிட்டுக் கொண்டனர்.. இச்சூழலில் திரு லீ என்ன செய்வார்..?

a)

மூன்று பிள்ளைகளுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுப்பார்.

b)

யாருக்கும் கொடுக்காமல் தானே சாப்பிடுவார்..

4.

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

இக்கூற்று எந்த நெறிக்குத் தொடர்புடையது ?

a)

மிதமான மனப்பான்மை

b)

மரியாதை

c)

நடுவுநிலைமை

5.

அப்பா கண்ணனின் பிறந்தநாள் அன்று மிதிவண்டி ஒன்றினை வாங்கித் தந்தார். மாலை வேளையில் கண்ணனின் மிதிவண்டியினைச் செலுத்துவதற்கு அவனது மூன்று தங்கைகளும் சண்டையிட்டுக் கொண்டனர்...அப்பாவின் அடுத்த நடவடிக்கை என்ன?

a)

அப்பா மிதிவண்டியை ஓட்டுவதற்கான நேரத்தை மூவருக்கும் சமமாகப் பிரித்தல்.

b)

அப்பா மிதிவண்டியை மறைத்து வைத்தல்.

6.

ஆசிரியர் திரு அறிவழகன் தவறு செய்த இரு மாணவர்களை முறையாக விசாரிக்காமல் கண்டித்தார்..இது சரியா ?

a)

சரி

b)

தவறு

7.

பசுவின் கன்றினைத் தேர்காலில் இட்டுக் கொன்ற தன் மகனை அதே போன்று கொன்றார் மனுநீதிச் சோழன்.. மனுநீதி அரசன் _____

a)

மிகவும் அறிவாளி

b)

நடுநிலையாக விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் மனிதர்.

8.

நடுநிலைமை எனும் பண்பினை இழந்தால் நம் நிலைமை என்ன ?

a)

மரியாதை கெடும்

b)

துணிச்சல் ஏற்படும்

c)

கோபம் உண்டாகும்

d)

தனிமை உண்டாகும்

9.

அகிலனும் முகிலனும் சண்டையிட்டுக் கொண்டனர்...அகிலனின் அம்மா இரு பக்கமும் உள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்தார்..அகிலனின் அம்மா செய்தது சரியா ?

a)

தவறு

b)

சரி

10.

தணிகாசலம் அறிவழகனின் நெருங்கிய நண்பன்.. அறிவழனின் மகன் தவறு செய்தது தெரிந்தும் தணிகாசலம் ஒன்றும் நடவாதது போல் இருந்தார்...இது சரியா?

a)

தவறு

b)

சரி

11.

குற்றம் செய்த தன் மகனைக் காவல் துறையினரிடம் சரணடையச் செய்தார் மைக்கல்.மைக்கல் செய்தது சரியா?

a)

தவறு

b)

சரி

12.

தன் மகன் அண்டை வீட்டாரின் மிதிவண்டியைத் திருடியது தெரிந்தும் ஒன்றும் நடவாதது போல் இருந்தார் திருமதி நூர்.

a)

சரி

b)

தவறு