wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

லூக்கா 7 TO 12

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால், ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். யார் கூறியது ?

a)

படை வீரர்

b)

சீடர்

c)

நூற்றுவர் தலைவர்

d)

வரிதண்டுவோர்

2.

மனிதராய்ப் பிறந்தவர்களுள் ------------விடப் பெரியவர் ஒருவருமில்லை

a)

பேதுருவை

b)

யோவானை

c)

சிமியோனை

d)

சூசையை

3.

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற பெண் யார் ?

a)

கூசாவின் மனைவி

b)

யோவன்னா

c)

மகதலா மரியா

d)

சூசன்னா

4.

---------------அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது

a)

இறையாட்சியின் நித்தியத்தை

b)

இறையாட்சியின் மேன்மையை

c)

இறையாட்சியின் வருகையை

d)

இறையாட்சியின் மறைபொருளை

5.

உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு ----------சான்றாகும்

a)

மறைவான

b)

எதிரான

c)

உகந்த

d)

ஏற்ற

6.

இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு -----------பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்

a)

52

b)

62

c)

72

d)

82

7.

"அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” யாரிடம் இருந்து எடுக்கப்படாது?

a)

மார்த்தா

b)

மரியா

c)

யோவன்னா

d)

சூசன்னா

8.

--------- கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்

a)

போதனைகளை

b)

இறைவார்த்தையை

c)

நல் உரைகளை

d)

கட்டளைகளை

9.

யார் அறிவித்த செய்தியைக் கேட்டு நினிவே மக்கள் மனம் மாறினார்கள்?

a)

எலியா

b)

யோனா

c)

மீக்கா

d)

எரேமியா

10.

"அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்” யாரை பார்த்து இயேசு கூறினார் ?

a)

பரிசேயர்

b)

தீய தலைமுறையினர்

c)

சதுசேயர்

d)

திருச்சட்ட அறிஞர்

11.

“ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினருக்கு -------------எழுப்புகிறீர்கள்.

a)

சிலைகளை

b)

நினைவுச் சின்னங்கள்

c)

சிற்பங்களை

d)

மணி மண்டபங்களை

12.

உட்புறத்தில் உள்ளவற்றைத் --------------கொடுங்கள்.

a)

உவப்புடன்

b)

தாராளமாக

c)

தர்மமாக

d)

மகிழ்ச்சியுடன்

13.

நீங்கள் இருளில் பேசியவை----------- கேட்கும்.

a)

இருளில்

b)

பகலில்

c)

ஒளியில்

d)

யாருக்கும் கேட்காது

14.

யாரை பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.

a)

பிதா

b)

சுதன்

c)

தூய ஆவி

d)

மூவொரு கடவுள்

15.

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள்--------- இருக்கும்.

a)

எண்ணம்

b)

சிந்தனை

c)

உள்ளமும்

d)

மனம்