wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

“தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையிலும்” இங்கு கயம் என்பதன் ஒத்த கருத்துச் சொல்

a)

குளம்

b)

படை

c)

கடல்

d)

வனம்

2.

“மாகமடங்கலும் மால்விடையும்” இங்கு மடங்கல் என்பதன் பொருள்

a)

ஆண் யானை

b)

மேருமலை

c)

சிங்கம்

d)

எருது

3.

நெல்லின் உள்ளீடு அரிசி என்பது போல, கற்றாளையின் உள்ளீடு.

a)

சதை

b)

சோறு

c)

பருப்பு

d)

விதை

4.

துன்பந்தரும் ஒன்றை சகித்து கொண்டிருத்தல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்?

a)

வாலாட்டுதல்

b)

வாய்ப்பூட்டு போடுதல்

c)

பல்லைகடித்தல்

d)

வயிறு கழுவுதல்

5.

அவன் தன்னிடமிருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும் வைத்தியத்திற்காக செலவிட்டான் – கொஞ்சநஞ்சம் என்ற இணைமொழி தரும் பொருள்?

a)

சிறிதளவு

b)

கணிசமான அளவு

c)

பெருந்தொகை

d)

சேகரித்ததொகை

6.

சரியான வழிகாட்டி அமையாத சமூகம் திசைமாறிப் போவதை குறிக்கும் உவமைத்தொடர்?

a)

வலையிற் சிக்கிய மான் போல

b)

உறியில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைதல் போல

c)

மீகாமன் இல்லாத மரக்கலம் போல

d)

அம்மி துணையாக ஆற்றில் இறங்கியது போல

7.

மரவேர் என்பது?

a)

தோன்றல் விகாரம்

b)

இயல்பு புணர்ச்சி

c)

கெடுதல் விகாரம்

d)

திரிதல் விகாரம்

8.

விண் இயங்கும் ஞாயிறைக் கை மறைப்பார் இல் – இங்கு ஞாயிறு என்பதன் பொருள்?

a)

கிழமை

b)

பகல்

c)

சூரியன்

d)

நாள்

9.

வெற்றி வேலோ உனது நயனங்கள் – நயனங்கள் என்பதன் ஒத்தகருத்து சொல்?

a)

புருவங்கள்

b)

பற்கள்

c)

இதழ்கள்

d)

கண்கள்

10.

வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று உபசாரம் செய்தல் நல்ல பழக்கமாகும் – உபசாரம் என்பதன் எதிர்பொருள் சொல்?

a)

அபசாரம்

b)

விவகாரம்

c)

அபகாரம்

d)

அவமானம்

11.

சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை சிலரால் ஆட்சேபிக்கப்பட்டது. இங்கு ஆட்சேபித்தல் என்பதன் எதிர்கருத்து சொல்?

a)

நிராகரித்தல்

b)

அமுலாக்குதல்

c)

பிரேரித்தல்

d)

ஆமோதித்தல்

12.

உண்மையை உறுதிப்படுத்தாமலே ஊர் மக்கள் பரப்பும் ஐயத்துக்கிடமான செய்தி?

a)

அறிவிப்பு

b)

அறிவித்தல்

c)

வதந்தி

d)

புகார்

13.

வயலும் வயல் சார்ந்த நிலமும்?

a)

முல்லை

b)

மருதம்

c)

நெய்தல்

d)

குறிஞ்சி

14.

கிடைத்தற்கரிய நூதனமான பொருட்கள் மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளன. மியுசியம் என்ற சொல்லின் தமிழ் சொல்?

a)

அருங்காட்சியகம்

b)

காட்டரண்

c)

சுவடிகள் கூடம்

d)

புகலரண்

15.

சேற்றில் புதைத்த யானையைக் காகமும் கொத்தும்” என்ற பழமொழி தரும் உட்கருத்து?

a)

ஆனையானாலும் அடி சறுக்கும்

b)

தந்திரமுள்ள காக்கையால் வலிமையுடைய யானையும் வெல்ல முடியும்

c)

ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்

d)

உயர்ந்த நிலையிலிருந்த ஒருவர் தன்னிலை தாழும் போது மிக எளியரும் அவரைத் துன்புறுத்துவர்