wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் புதிர்போட்டி (படிநிலை 1)

Total questions: 25

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

யார் இவர்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

கம்பர்

d)

பாரதிதாசன்

2.

நிரல்படுத்துக.


எனின் / கற்றதனா / நற்றாள் / பயனென்கொல் / தொழாஅர் / லாய / வாலறிவன்

a)

கற்றதனா லாய நற்றாள் தொழாஅர்

பயனென்கொல் வாலறிவன் எனின்

b)

பயனென்கொல் கற்றதனா வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

d)

கற்றதனா வாலறிவன் தொழாஅர் எனின்

நற்றாள் லாய பயனென்கொல்

3.

திருக்குறளுக்கான பொருளைத் தெரிவு செய்க.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

a)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

b)

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

c)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

d)

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

4.

சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.


என் பெயர் முத்து. நான் ஓர் இராணுவ விமானி. நான் தினமும் இறைவனை வணங்க தவறியதில்லை.

a)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

b)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

d)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

5.

இனிய உளவாக இன்னாத கூறல்

____________________________________________

a)

பகவன் முதற்றே உலகு

b)

புண்ணுடையர் கல்லா தவர்

c)

யாண்டும் இடும்பை இல

d)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

6.

விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்.


எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

c)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

d)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

7.

படத்திற்கு ஏற்ற குறளைத் தெரிவு செய்க.

a)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

b)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

c)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

d)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

8.

திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

a)

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக் கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்

b)

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

c)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

d)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.

இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

9.

_____________________________________________

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

a)

தீயவை தீய பயத்தலால் தீயவை

b)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

c)

ஞாலத்தின் மாணப் பெரிது

d)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

10.

சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.


மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

d)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

11.

நிரல்படுத்துக.


புடைத்து / ஒருமைக்கண் / எழுமையும் / கல்வி

தான்கற்ற / ஏமாப் / ஒருவற்கு

a)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

எழுமையும் ஏமாப் புடைத்து

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

c)

ஒருமைக்கண் எழுமையும் கல்வி

தான்கற்ற ஒருவற்கு ஏமாப் புடைத்து

d)

எழுமையும் தான்கற்ற கல்வி எழுமையும்

ஒருமைக்கண் ஒருவற்கு ஏமாப் புடைத்து

12.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

c)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

d)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

13.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல. அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

a)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

c)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

d)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி

சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

14.

திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் : முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்

c)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

d)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும். தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

15.

ஒழுக்கம் ______________ தரலான் ஒழுக்கம்

உயிரினும் ________________ படும்

a)

கருமம்

இழுக்கு

b)

தூறும்

அறிவு

c)

விழுப்பம்

ஓம்பப்

d)

வழியது

போர்த்த

16.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.

a)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று

b)

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

c)

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்

d)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

17.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையனவாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

a)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கன் களைவதாம் நட்பு

b)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

c)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

d)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

18.

_______________________________________________

தீமை இலாத சொலல்.

a)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

b)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

c)

தீயவை தீய பயத்தலால் தீயவை

d)

வொருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

19.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

உலகமும் எழுத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையாகும்

b)

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லையேல் பிறக்காமல் இருப்பதே சிறப்பு

c)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயெழுக்கம்

என்று இடும்பை தரும்.

நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் அனைவரிடமும் இருக்கும்.

d)

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்

ஒரு செயலைச் செய்ய எண்ணுபவர்கள் உறுதியுடைவர்களாக இருந்தால் வெற்றியடைவர்.

20.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.


குறளில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது ?

a)

ஆசிரியர்கள்

b)

பெற்றோர்கள்

c)

குழந்தைகள்

d)

மனிதர்கள்

21.

நிரல்படுத்துக.


துப்பார்க்குத் / மழை / துப்பாக்கித் / துப்பாய /

துப்பாய / துப்பார்க்குத் / தூஉம்.

a)

துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

b)

துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

c)

துப்பாய தூஉம் மழை துப்பார்க்குத்

துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

d)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

22.

கீழ்காணும் கருத்தை மிகப் பொருத்தமாக உணர்த்தும் திருக்குறள் எது ?


கல்வியினும் உயர்ந்தது ஒன்றுமில்லை

a)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

b)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

c)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

d)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

23.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

புகழ்பட வாழாதார் தந்நோவர் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

c)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

d)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

24.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

_____________________________________

a)

தெய்வத்துள் வைக்கப் படும்

b)

என்புதோல் போர்த்த உடம்பு

c)

இழுக்கா இயன்றது அறம்

d)

இன்மை புகுத்தி விடும்

25.

காலத்தி னாற்செய்த __________ __________________

ஞாலத்தின் மாணப் பெரிது.

a)

நன்றி சிறிதெனினும்

b)

கேட்பினும் அப்பொருள்

c)

கல்வி ஒருவற்கு

d)

அனிச்சம் முகந்திரிந்து